தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp Functionary Murder: பாஜக பிரமுகர் கொடூரக் கொலை..திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை - அண்ணாமலை

BJP Functionary Murder: பாஜக பிரமுகர் கொடூரக் கொலை..திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை - அண்ணாமலை

Karthikeyan S HT Tamil
Apr 28, 2023 12:09 PM IST

BJP Functionary Murder: திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சங்கர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கொலை செய்யப்பட்ட சங்கர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த இவரை சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஒரு மர்மகும்பல் வழிமறித்து காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. பின்னர் காரில் இருந்து வெளியேறிய சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.

பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்