தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Manaadu: மதுரை அதிமுக மாநாடு;வேகாத புளி சாதம்.. வீசிச்சென்ற தொண்டர்கள்!

ADMK Manaadu: மதுரை அதிமுக மாநாடு;வேகாத புளி சாதம்.. வீசிச்சென்ற தொண்டர்கள்!

Karthikeyan S HT Tamil
Aug 20, 2023 12:32 PM IST

Madurai ADMK Manaadu: மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் காலை உணவாக வழங்கப்பட்ட புளிசாதம் வேகவில்லை என அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு ஆங்காங்கே கிடக்கும் காட்சி.
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு ஆங்காங்கே கிடக்கும் காட்சி.

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையில் அதிமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளின் தலைமையில் பேருந்து, கார், வேன்களில் மாநாட்டிற்காக குவிந்துள்ளனர். இதனால் மதுரை நகரமே எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமுக தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 10 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டின் நுழைவு வாயிலில் அண்ணாத்துரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் ஆகியோரின் ஆள் உயர பிரமாண்ட உருவ கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் புடைசூழ மாநாடு நடைபெறும் பகுதிக்கு இன்று காலை 8.30 மணிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயரகொடிகம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு திடலில் அவர் கொடியேற்றிய போது சுமார் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் ஹெலிகாப்டரில் இருந்து தூவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களுக்கு காலை உணவாக புளி சாதம், சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. மொத்தம் இன்று ஒரு நாளில் மட்டும் 10 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தொண்டர்கள் உணவை வாங்கிச் சென்று உண்டனர். இதனிடையே அதிமுக மாநாட்டில் காலை உணவாக வழங்கப்பட்ட புளிசாதம் வேகவில்லை என அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

வேகாத உணவை எப்படி சாப்பிடுவது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உணவு நன்றாக இல்லை எனவும் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், புளி சாதத்தை வாங்கி ஒரு வாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு அப்படியே ஆங்காங்கே வீசிச்சென்ற காட்சிகளும் அரங்கேறியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்