தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12th Supplementary Exam : 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனிக்க! நாளை முதல் சிறப்பு வகுப்புகள்

12th Supplementary Exam : 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனிக்க! நாளை முதல் சிறப்பு வகுப்புகள்

Priyadarshini R HT Tamil
May 14, 2023 12:55 PM IST

12th Supplementary Exam : துணைத்தேர்வுக்கு, வரும் 17ம் தேதி வரை மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் 5 மணி வரை மையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் நேரடியாகச்சென்று, விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் வரும் மே 15ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்கள் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் தேர்வை எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன், ஜூலை மாதம் நடக்கும் சிறப்பு துணைத்தேர்வுகளுக்கு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

தற்போது அதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

மேலும், நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், முதல் முறையாக துணைத்தேர்வு எழுதுவோர், கடந்த பொதுத்தேர்வில் கலந்துகொள்ளாத ஆன தனித்தேர்வர்கள் அனைவரும், அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்ட சேவை மையங்களில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

துணைத்தேர்வுக்கு, வரும் 17ம் தேதி வரை மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் 5 மணி வரை மையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் நேரடியாகச்சென்று, விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டும்.

தட்கல் முறையில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த முறை பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், துணைத்தேர்வு எழுதவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, சேவை மையங்களை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்