தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Venkatesh Prasad Vs Aakash Chopra:கேஎல் ராகுல் பற்றி சூடான விவாதம்!என்ன நடந்தது?

Venkatesh Prasad vs Aakash Chopra:கேஎல் ராகுல் பற்றி சூடான விவாதம்!என்ன நடந்தது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 22, 2023 12:15 PM IST

மோசமான பேட்டிங் பார்மை தொடர்ந்து வரும் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது பற்றி பலமுறை சாடி வந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத். இந்த விவகாரம் தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்களிடையே டுவிட்டரில் போர் ஏற்பட்டுள்ளது.

கேஎல் ராகுல் பார்ம் தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா இடையே சுடான விவாதம்
கேஎல் ராகுல் பார்ம் தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா இடையே சுடான விவாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

சுப்மன் கில், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில் கேஎல் ராகுல் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதை சாடினார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான வெங்கடேஷ் பிரசாத். இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் - ஆகாஷ் சோப்ரா ஆகியோரிடையை கார சார விவாதம் டுவிட்டரில் நிகழ்ந்துள்ளது.

ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விடியோவில், அதில் வெங்கடேஷ் பிரசாதை புத்திசாலித்தனமாக தவறாக மேற்கொள் காட்டியதுடன், நன்கு திட்டமிடும் வியாபாரி என்பது போல் சித்தரித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோஹித் ஷர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே குறித்து ஆகாஷ் சோப்ரா பதிவிட்ட 11 ஆண்டு பழைய டுவிட் பதிவை பகிர்ந்து, அடுத்தடுத்து ஆறு டுவிட் பதிவுகளுடன் தனது கருத்தை பகிர்ந்தார்.

இதற்கு ஆகாஷ் சோப்ரா தன்னுடன் விடியோ சாட்டில் வந்தால் இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று வெங்கடேஷ் பிரசாத்துக்கு கோரிக்கை வைத்தார்.

அத்துடன், ரோஹித் மற்றும் ரஹானே குறித்து பதிவிட்ட டுவிட் பார்க்க முடியவில்லை எனவும், விடியோ சாட்டில் வந்தால் நேரடியாக பேசி தீர்த்துகொள்ளலாம் எனவும் டுவிட்டரில் பதில் அளித்தார் ஆகோஷ் சோப்ரா.

மேலும், தனது பதிவில் "கருத்து வேறுபாடு இருப்பது நல்லதுதான். அதை சரியான முறையில் தீர்த்துகொள்ள வேண்டும். எனக்காக யாரும் ஸ்பான்சர் இல்லை. இதை வைத்து நான் பணம் எதுவும் சம்பாதிக்கபோவதில்லை. உங்களிடம் என போன் நம்பர் உள்ளதே" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த வெங்கடேஷ் பிரசாத், " இல்லை ஆகாஷ். எந்த டுவிட் பதிவும் காணாமல் போகவில்லை. நீங்கள் பதிவிட்ட 12 நிமிட விடியோவில், உங்களது கட்டுக்கதைக்கு எனது கருத்துகள் பொருந்தாத காரணத்தால் என்னை வியாபாரி என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதுதொடர்பாக நான் பதிவிட்ட தொடர் டுவிட்டில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். எனது இதுபற்றி மேலும் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை." என்று முடித்துக்கொண்டார்.

தொடர் சொதப்பல்களை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுலுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த துணை கேப்டன் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 இன்னிங்ஸாக 30 ப்ளஸ் ரன்களை அடிக்க தடுமாறி வரும் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்