தமிழ் செய்திகள்  /  Sports  /  Trent Boult Gives Up Central Contract

நியூசிலாந்து அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய ட்ரெண்ட் போல்ட்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 11, 2022 12:24 PM IST

ஐசிசி சிறந்த பெளலர்கள் தரவரிசையில் டாப் 3 இடங்களில் தவறாமல் இடம்பிடித்து வருபவராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். இவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் (Action Images via Reuters)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து அவரை நியூசிலாந்து தேசிய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது. இதனால் இனி அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடமாட்டர் என தெரிகிறது.

இதுபற்றி ட்ரெண்ட் போல்ட் கூறியதாவது:

எனது இந்த கடினமான முடிவுக்கு ஆதரவு அளித்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுதென்பது சிறு வயது கனவாகவே இருந்தது.

கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளேன். நான் தற்போது எடுத்துள்ள முடிவு மனைவி கெர்ட் மற்றும் எங்களது மூன்று மகன்களை பற்றியது.

என்னுடையே ஒவ்வொரு முயற்சிக்கும் இவர்கள் மிகப் பெரிய உந்துதலாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் முக்கியத்துவம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்கு பிறகு தயார்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்துள்ளேன்.

தற்போது எடுத்துள்ள இந்த முடிவு நியூசிலாந்து அணிக்காக விளையாடு வாய்ப்புகளை குறைக்கும் என எனக்கு தெரியும். நாட்டுக்காக விளையாடுவதற்கு எனக்கு ஆசை உள்ளது. இருப்பினும் தேசிய அணிக்காக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருப்பது எனக்கான வாயப்பை பாதிக்கும். இருப்பினும் நான் அடுத்தகட்டத்துக்கான செல்லும் நேரமாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மொத்தம் 215 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள போல்ட், 548 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைஸர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ். மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

WhatsApp channel