தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Suresh Raina: உணவுக்கான மிஷனில் ஈடுபட்டுள்ளேன்! ஆம்ஸ்டர்டாமில் புதிய ரெஸ்ட்ராண்டை திறந்திருக்கும் ரெய்னா பகிர்வு

Suresh Raina: உணவுக்கான மிஷனில் ஈடுபட்டுள்ளேன்! ஆம்ஸ்டர்டாமில் புதிய ரெஸ்ட்ராண்டை திறந்திருக்கும் ரெய்னா பகிர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 24, 2023 11:04 AM IST

நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் இந்திய ரெஸ்ட்ராண்டை திறந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்தியாவின் பல பகுதிகளின் பாரம்பரியமான உணவுகள் இங்கு பரிமாறப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்டர்டாமில் தனது பெயரில் இந்திய உணவகத்தை திறந்திருக்கும் ரெய்னா
ஆம்ஸ்டர்டாமில் தனது பெயரில் இந்திய உணவகத்தை திறந்திருக்கும் ரெய்னா

ட்ரெண்டிங் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வை அறிவித்த மறுகணமே இவரும் ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடர்களில் சில காலம் விளையாடிய ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து தொழிலதிபராக மாறியிருக்கும் ரெய்னா, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் புதிய ரெஸ்ட்ராண்டை திறந்துள்ளார். இந்திய உணவகமான இதில் அனைத்து இந்திய வகை உணவுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டுவிட்டரில் பகிர்ந்துள்ள ரெய்னா, "ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அங்கு உணவு மற்றும் சமையலில் இருக்கும் ஆர்வத்தின் முக்கியத்துவத்தால் திறந்துள்ளேன்.

பல ஆண்டுகள் உணவு மற்றும் சமையல் தொடர்பான என செயல்பாடுகளை பலரும் பார்த்துள்ளார்கள். இந்தியாவின் பாரம்பரிய, உண்மையான சுவையுடன் கூடிய பல்வேறு பகுதிகளின் உணவுகளை நேரடியாக ஐரோப்பியர்களின் மனதில் சேர்ப்பதற்கான மிஷனில் இறங்கியுள்ளேன்.

சாகசம் மிகுந்த இந்த உணவு பயணத்தில் என்னும் சேருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்டர்டாம் நகருடன் ரெய்னாவின் உறவு என்பது புதிதல்ல. அவரது மனைவி பிரியங்கா இந்த நகரில் இருக்கும் வங்கியில் பணிபுரிந்து வருவதால், ரெய்னா அடிக்கடி ஆம்ர்ஸ்டம் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரெய்னா திறந்திருக்கும் ரெஸ்ட்ராண்டில் மதிய உணவு, இரவு உணவு, டே அவே என அனைத்து உள்ளது. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ரெய்னாவுடன் சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான ஹர்பஜன் சிங், அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் இந்தியா அணி உலகக் கோப்பை வென்ற அணியிலும், 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் ரெய்னா. இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்களிப்பை தந்ததார் என்பதை யாராலும் மறக்க முடியாது. கிரிக்கெட்டுக்கு முழுமையாக முழுக்கு போட்டிருக்கும் ரெய்னா பிஸினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்