ICC ODI Rankings: ஒரே தொடரில் நியூசிலாந்தின் நம்பர் 1 இடத்தை தகர்த்த இந்தியா!
கடைசி ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளைப் போல இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை 3-0 என கைப்பற்றினால், ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இந்தியா மாறும்.
ராய்ப்பூரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலம் MRF டயர்ஸ் ICC ஆடவர் ODI அணி தரவரிசையில் முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து அணி.
ட்ரெண்டிங் செய்திகள்
ராய்ப்பூரில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து MRF டயர்ஸ் ICC ஆடவர் ODI அணி தரவரிசையில் நம்பர்.2 இடத்துக்குச் சரிந்து. இதனால் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்தியாவிற்கு எதிரான ஐதராபாத் போட்டியில் போராடி தோற்றிருந்த போதும், அது ஒரு கவுரவ தோல்வியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் படுதோல்வி, தொடரையும் இழக்க வழிவகுத்தது. இதனால் நியூசிலாந்து அணியின் புள்ளிகள் கடுமையாக சரிந்தன.
இந்த ஆட்டத்திற்கு முன், நியூசிலாந்து 115 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 113 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 111 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தன.
இந்தியாவிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து 113 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து மற்றும் இந்தியா 113 ரேட்டிங் புள்ளிகளுடன் முறையே முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளைப் போல இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை 3-0 என கைப்பற்றினால், ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இந்தியா மாறும். ஒரே தொடரில் நம்பர் 1 இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய இந்திய அணி, தனது இடத்தையும் முன்னோக்கிச் சென்றுள்ளது.