தமிழ் செய்திகள்  /  Sports  /  Mohammed Shami This Is More Important Than Training Shamis Idea

Mohammed Shami: பயிற்சியை காட்டிலும் இதுதான் முக்கியம்- ஆட்டநாயகன் ஷமியின் ஐடியா

Manigandan K T HT Tamil
Jan 22, 2023 07:58 AM IST

இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் வென்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வீரர்களின் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதை பிசிசிஐ நிர்வாகமும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகக் கோப்பையில் விளையாடப்போகும் வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க தேசிய கிரிக்கெட் அகாடமி ஐபிஎல் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், 3 விக்கெட்டுகளை அள்ளி ஆட்டநாயகன் விருதை வென்ற முகமது ஷமி இதுகுறித்து கூறியதாவது:

பயிற்சியில் ஈடுபடுவதை விட, அதிக போட்டிகளில் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவதற்கு நாம் அதிக ஆட்டங்களில் விளையாடினாலே போதும் என்று நினைக்கிறேன். பணிச்சுமையை நிர்வகித்துக் கொள்ளலாம்.

ராய்ப்பூர் ஆடுகளத்தின் தன்மை நினைத்தது போல் இல்லை. ஆனாலும், பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

சீனியர் பந்துவீச்சாளராக நான் சக பந்துவீச்சாளரிடம் பேசுவேன். எந்தவொரு பந்துவீச்சாளரும் முழு முயற்சியை விக்கெட் எடுப்பதற்காக போடுவார்கள். ஆனால், உங்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றால் சக பந்துவீச்சாளரிடம் ஆலோசனை கேட்கலாம்.

நான் அணிக்கு வந்ததில் இருந்து எனது பங்கு மாறவில்லை (சிரிக்கிறார்). ஃபிட்னஸ் மற்றும் டயட்டில் தொடர்ந்து சரியாக இருக்கிறேன்.செவ்வாய்கிழமை இந்தூரில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவர் ரஜத் படிதார் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.

நிர்வாகம் அதற்கு அழைப்பு விடுக்கும். ஆனால் தொடரை வென்றதால் அவர்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதுகிறேன்.

கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இருப்பினும், அணியின் மீது சந்தேகம் இருக்கும்பட்சத்தில் இன்னும் அதிக ஆட்டங்களில் விளையாடி சரியான வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டும் என்றார் முகமது ஷமி.

WhatsApp channel

டாபிக்ஸ்