தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mlc 2023: இன்னும் சூடு குறையாத பிராவோ! அன்ரிச் நார்ட்ஜே அசுர வேகத்தில் 106மீட்டர் சிக்ஸ் - டெக்சாஸ் அணிக்கு முதல் தோல்வி

MLC 2023: இன்னும் சூடு குறையாத பிராவோ! அன்ரிச் நார்ட்ஜே அசுர வேகத்தில் 106மீட்டர் சிக்ஸ் - டெக்சாஸ் அணிக்கு முதல் தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 18, 2023 09:31 AM IST

வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவெய்ன் பிராவோ 106 மீட்டர் தூரத்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த போட்டியில் டெக்சாஸ் அணி தோல்வியை தழுவியது.

இமாலய சிக்ஸரை பறக்க விட்ட பிராவோ
இமாலய சிக்ஸரை பறக்க விட்ட பிராவோ

ட்ரெண்டிங் செய்திகள்

அன்ரிச் நார்ட்ஜே வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் 106 மீட்டர் தூரத்துக்கு இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார் டுவெய்ன் பிராவோ.

இவரது இந்த மிரட்டலான சிக்ஸரின் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகள் சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்த வந்த பிராவோ, பவுலிங்கில் சிறந்த பினிஷராகவும் ஜொலித்து வந்துள்ளார்.

இதையடுத்து அவரை சிஎஸ்கே நிர்வாகம் கழட்டிவிட்ட நிலையில், இந்த சீசனில் ஓய்வை அறிவித்தார். அத்துடன் சிஎஸ்கே அணியிலேயே பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2023 சீசனில் 5வது முறையாக சிஎஸ்கே கோப்பையை தட்டியது.

தற்போது முதல் முறையாக அமெரிக்கவாலி நடைபெற்றும் வரும் எம்எல்சி லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணியின் கிளை அணியாக இருக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது. இந்த அணியின் சிஎஸ்கே முன்னாள் வீரர்கள், இந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதன்படி டேவான் கான்வே, டூ பிளெசிஸ், டுவெயின் பிராவோ, மிட்செல் சாண்ட்னர் உள்பட சிஎஸ்கே வீரர்கள் இந்த அணியில் உள்ளனர்.

சிஎஸ்கே அணியில் பவுலிங்கில் கலக்கியுள்ள பிராவோ, அவ்வப்போது பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தால் மிரட்டுவார். அந்த வகையில் ஓய்வுக்கு பின்னரும் இன்னும் சூடு குறையாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிராவோ.

முன்னதாக இந்த போட்டியில், வாஷிங்டன் அணி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை விரட்டிய டெக்சாஸ் அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் பேட் செய்ய வந்த டுவெயின் பிராவோ அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினார். அவர் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களை அடித்து 76 ரன்களை விளாசினார்.

இந்த போட்டியில் டெக்சாஸ் அணி 20 ஓவரில் 157 ரன்களை எடுத்த நிலையில், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோலிவியை தழுவியது. இதன் மூலம் சீசனின் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் டெக்சாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்