April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்
April Sports Rewind 2024: ஏப்ரல் மாதம் ஸ்போர்ட்ஸ் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
ஏப். 1: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 2: ஆர்சிபியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
ஏப். 3: டெல்லி கேபிடல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஏப். 4: குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஏப். 5: சிஎஸ்கே-ஐதராபாத் மோதிய ஆட்டத்தில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 6: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர், தனது 100வது ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
மும்பை இந்தியன் வெற்றி
ஏப். 7: மும்பை இந்தியன் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
குஜராத்தை எல்எஸ்ஜி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது
ஏப். 8: கொல்கத்தா அணியை சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 9: ஐதராபாத் அணி, பஞ்சாபை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது.
ஏப். 10: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியது.
ஏப். 11: ஆர்சிபியை மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஏப். 12: எல்எஸ்ஜி அணியை டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 13: பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடந்த மேட்ச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஏப். 14: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது
மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தியது.
ஏப். 15: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
ஏப். 16: கொல்கத்தா, ராஜஸ்தான் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 17: குஜராத்-டெல்லி மோதிய மேட்ச்சில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்து.
ஏப். 18: மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மோதிய 33வது லீக் மேட்ச்சில் மும்பை இந்தியன் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 19: சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதிய மேட்ச்சில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 20: டெல்லி கேபிடல்ஸ்-ஐதராபாத் மோதிய மேட்ச்சில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஏப். 21: ஆர்சிபி-கொல்கத்தா மோதிய மேட்ச்சில் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி கண்டது.
மற்றொரு மேட்ச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஏப். 22: மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
குகேஷ் வெற்றி
ஏப். 22: டொராண்டோவில் நடைபெற்ற கேன்டிடேட் செஸ் போட்டியில் இந்தியாவின் 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
ஏப். 23: சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் தோற்கடித்தது எல்எஸ்ஜி அணி. சென்னையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எல்எஸ்ஜி ஜெயித்தது.
ஏப். 24: டெல்லி கேபிடல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஏப். 25: ஆர்சிபி அணி, ஐதராபாத்தை 35 ரன்கள் வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
ஏப். 26: கேகேஆரை பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
ஏப். 27: டெல்லி அணி மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது.
ஏப். 28: சென்னையின் எஃப்சி கால்பந்து அணியின் கேப்டன் ரியான் எட்வர்ட்ஸ் தனது ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளதாக சென்னையின் எஃப்சி அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 29: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லியை வீழ்த்தியது.