தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Rr Qualifier 2 Preview: மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சி! சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் அணியின் 3 மந்திரங்கள்

SRH vs RR Qualifier 2 Preview: மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சி! சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் அணியின் 3 மந்திரங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 24, 2024 06:20 AM IST

SRH vs RR Qualifier 2: மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் களமிறங்குகிறது. சன் ரைசர்ஸ் பவர்புஃல் பேட்டிங் வரிசை, ராஜஸ்தான் ராயல்ஸ் கிளாஸ் பவுலிங் ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் பலப்பரிட்சையாக இன்று நடைபெற இருக்கும் குவாலிபயர் 2 போட்டி அமைகிறது.

மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் பலப்பரிட்ச்சை செய்ய இருக்கும் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான்
மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் பலப்பரிட்ச்சை செய்ய இருக்கும் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் முதல் குவாலிபயர் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை தழுவி, இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டாவது வாய்ப்பை பெறும் விதமாக இந்த போட்டியில் விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை வீழ்த்தி குவாலிபயருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் 5 தொடர் தோல்விகளை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

லீக் சுற்றில் சன் ரைசர்ஸ் ஆதிக்கம்

இந்த முறை லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரே முறை மோதிக்கொண்டன. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பயணத்துக்கு ஸ்பீடு பிரேக்கர் போட்ட போட்டியாக இது அமைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய எலிமினேட்டர் போட்டியில்தான் ராஜஸ்தான் வென்றது.

லீக் சுற்று முடிவில் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 17 புள்ளிகளை பெற்றிருந்தபோதிலும், ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்தது.

சன் ரைசர்ஸ் பவர்புஃல் பேட்டிங் வரிசை

இந்த சீசனில் பல நம்பமுடியாத சாதனைகளை நிகழ்த்திய அணியாக சன் ரைசர்ஸ் உள்ளது. குறிப்பாக அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை துவம்சம் செய்து வென்ற அணியாக இருந்துள்ளது. சன் ரைசர்ஸ் ஓபனர்களான ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் எதிரணிக்கு அழிவை ஏற்படுத்தும் ஓபனர்களாகவே இருந்துள்ளனர். இரண்டு முறை பவர்ப்ளேவில் மட்டும் 100 ரன்கள் மேல் அடித்து அதிரடி ருத்ர தாண்டவத்தை காண்பித்துள்ளனர்.

இவர்கள் தவிர் மிடில் ஆர்டரில் ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அதிரடியில் மிரட்டும் பேட்ஸ்மேன்களாக இருப்பதால் பவர்புஃல் பேட்டிங் வரிசை கொண்ட அணியாக உள்ளது. இவர்களின் பவுலிங்கை பொறுத்தவரை யார்க்கர் மன்னன் நடராஜன் அற்புத பவுலிங்கால் எதிரணி பேட்ஸ்மேன்கள் சவால் தரும் பவுலராக இருந்து வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கிளாஸ் பவுலிங்

சன் ரைசர்ஸ் போல் அதிரடியான பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இல்லாவிட்டாலும் தலைசிறந்த ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக உள்ளது. இவர்களின் பவுலிங் அட்டாக் முதல் பவுலிங்கிலும் சரி, சேஸிங்கிலும் சரி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக அமைந்துள்ளது.

அணியின் ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திரா சஹால் ஆகியோர் இணைந்து 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதுவரை ட்ரெண்ட் போல்ட் யார்க்கர், வேரியேஷன், சந்தீப் ஷர்மா ஸ்விங் பவுலிங் ஆகியவை ராஜஸ்தான் அணிக்கு பக்க பலமாக இருக்கும் என நம்பலாம்.

ஸ்பின்னுக்கு சாதகமான சென்னை மைதானம்

இந்த இரு அணிகளுக்கு இந்த சீசனில் இங்கு விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. பொதுவாகவே ஸ்பின் பவுலிங்குக்கு நன்கு சாதகமாக இருக்கும் சென்னை மைதானத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தும் அணிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் சென்னை மைதானத்தில் ஏராளமான போட்டிகளை விளையாடியிருக்கும் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருப்பது சாதகமான விஷயமாக உள்ளது. இதுதவிர மற்றொரு பிரதான ஸ்பின்னராக சஹால் இருக்கிறார். இதுதவிர மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப கேசவ் மகாராஜ் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. எனவே ஸ்பின் பலம் பொருந்திய அணியாக ராஜஸ்தான் ராயலஸ் உள்ளது.

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை, இலங்கையை சேர்ந்த இளம் ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்த் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்து வருகிறார். இதுதவிர் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது இருக்கிறார். அத்துடன் மயங்க் மார்கண்டே சேர்க்கப்படலாம். அனுபவ ஸ்பின்னர்கள் இல்லாவிட்டாலும் ராஜஸ்தான் போல் மூன்று ஸ்பின்னர்கள் சன் ரைசர்ஸ் அணியிலும் இடம்பிடித்திக்கிறார். எனவே இரு அணிகளில் இடம்பிடித்திருக்கும் ஸ்பின்னர்கள் மந்திரத்தால் இந்த போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும் ஸ்பின் பவுலர்கள் சாதிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பனிப்பொலிவு ஆட்டத்தின் பிற்பகுதியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் 10, ராஜஸ்தான் ராயல்ஸ் 9 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை லீக்கில் சன் ரைசர்ஸ் அணிதான் வென்றுள்ளது.

2008, 2022 சீசன்களை தொடர்ந்து மூன்றாவது பைனலுக்கான முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது. ஒரு முறை சாம்பியன், ஒரு முறை பைனலிஸ்டான சன் ரைசர்ஸ் அணியும் மூன்றாவது பைனலை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டி20 உலகக் கோப்பை 2024