தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023: மாஸ் என்ட்ரி கொடுத்த ஸ்டோக்ஸ்! பிட்னஸ் விஷயத்தில் சிக்கல்?

IPL 2023: மாஸ் என்ட்ரி கொடுத்த ஸ்டோக்ஸ்! பிட்னஸ் விஷயத்தில் சிக்கல்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 24, 2023 05:22 PM IST

அடுத்த வாரம் இதே நாளில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முன்னிணி வீரர்கள் பலரும் முறையே தங்களது அணியில் இணைந்துவிட்டனர். 2023 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே முகாமில் இணைந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் தன்னை இணைத்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்
சிஎஸ்கே அணியில் தன்னை இணைத்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதுடன், அது தொடர்பான விடியோக்கள், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அத்துடன் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் பலரும் தங்களது அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து கடந்த டிசம்பரில் நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சென்னை வருகை புரிந்துள்ளார். அணியில் தன்னை இணைத்து கொண்ட அவருக்கு, அணி நிர்வாகத்தினரால் மாஸ் என்ட்ரி கொடுக்கப்பட்டது.

சென்னை 600028 படத்தில் நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா ஏரியாவுக்கு என்ட்ரி கொடுக்கும்போது ஒலிக்கும் பாடல் மற்றும் பிஜிஎம்-ஐ, பென் ஸ்டோக்ஸ் என்ட்ரியில் சேர்த்து விடியோ ஒன்றும் சிஎஸ்கே அணியினரால் பகிரப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்டில் மூட்டு வலியால் அவதிப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையடுத்து தனது ஏற்பட்ட காயம் குறித்து ஸ்டோக்ஸ் பேசியதாவது: "இதை பற்றி நான் பொய் எதுவும் சொல்லப்போவதில்லை. நான் விரும்பியவாறு செயல்படாமல் இருப்பதை ஏதோ ஒன்று தடுப்பதை நினைக்கும்போது வெறுப்பாகவே உள்ளது. பிசியோ மற்றும் மருத்துவர்களுடன் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக நான் செய்த பணியை தொடர முழுமையாக முயற்சி மேற்கொள்கிறேன்.

என்னிடமிருந்து சிறந்தவற்றை கொடுப்பதற்காக அனைத்தையும் செய்கிறேன். சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்கிடம் தொடர்பில் இருந்து எனது உடல்நிலை குறித்து உரையாடியுள்ளேன்.் எனவே அவருக்கு என் உடல்நிலை பற்றி நன்கு தெரியும்" என்றார்.

WhatsApp channel

டாபிக்ஸ்