தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Suresh Raina: அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - ரெய்னா சொன்ன குட் நியூஸ்

Suresh Raina: அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - ரெய்னா சொன்ன குட் நியூஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 09, 2023 12:22 PM IST

தோனியின் ஓய்வு குறித்து மிகப் பெரிய விவாதம் ஒரு புறம் இருக்க, அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் விளையாடியபோது தோனியுடன், ரெய்னா (கோப்புப்படம்)
சிஎஸ்கே அணியில் விளையாடியபோது தோனியுடன், ரெய்னா (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் அவர் களமிறங்கிய போட்டிகள் அனைத்தும் சரவெடியாகவே அமைந்துள்ளன. முன்னதாக இந்த சீசன் தொடங்குவதற்கு முன் மூட்டு வலியால் அவதிப்பட்ட அவர், அதையும் பொருப்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்ககூடும் என கருதி, அவரை களத்தில் காண்பதற்காகவே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்துடன் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளில் உள்ளூர் அணியை காட்டிலும், தோனிக்காக கூடும் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

மைதானத்தில் எங்கு பார்த்தாலும் சிஎஸ்கே அணியின் ஜெர்சியான மஞ்சள் நிறம் பூசியதாக காணப்படுகிறது. இதையடுத்து தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்ற தித்திப்பான செய்தியை கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா.

இதுகுறித்து ரெய்னா கூறியதாவது:

"இந்த முறை ஐபிஎல் கோப்பை வென்றால் மேலும் ஒரு ஆண்டு ஐபிஎல்-இல் விளையாடுவேன் என கூறியதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது அவர் சிறப்பாக பேட் செய்வதுடன் நல்ல நிலையிலேயே உள்ளார். அணியின் காம்பினேஷனும் சிறப்பாக உள்ளது. தோனியிடம் ஏராளமான விஷயங்களை பல வீரர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும் தோனி அவரது உடல்நிலையை மனதில் வைத்து முடிவை எடுப்பார். நான் அவருடன் பழகிய இத்தனை நாள்களில் வைத்து சொல்வதென்றால், இன்னும் ஒரு ஆண்டு வரை அவர் விளையாட வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்த இடத்தில் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 2021 சீசனுக்கு பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2022இல் நடைபெற்ற மெகா ஏலத்தில்அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

தற்போது வர்ணனையாளராக இருந்து வரும் ரெய்னா, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை போட்டியை காண நேரில் வந்ததோடு, அங்கிருந்து வர்ணனையும் செய்தார். இதையடுத்து அந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் ரெய்னா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்