தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Vs Kkr Tickets: இந்த சீசனில் சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

CSK vs KKR Tickets: இந்த சீசனில் சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 11, 2023 10:55 AM IST

இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டமாக சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதும் போட்டிகள் நடைபெறவுள்ளன. தற்போதைய நிலையில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கி கொள்ளலாம்.

ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும்.

ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கே - கொல்கத்தா மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டமாக இருந்தாலும், அதன் பிறகு குவாலிபயர் 1, எலிமினேட்டர் போட்டிகளும் அங்கு நடைபெறவுள்ளன. தற்போதையை நிலையில் 15 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்னும் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட சிஎஸ்கே ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதன் பின்னர் மீண்டும் ப்ளேஆஃப் போட்டியில் சேப்பாக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

மற்ற ஐபிஎல் சீசன்களில் போல் அல்லாமல் இந்த முறை அனைத்து அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்று ரன்ரேட் அடிப்படையிலேயே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனவே இந்த முறை வெற்றி பெறுவதை காட்டிலும் ரன்ரேட்டை அதிகமாக வைத்துக்கொள்வதில் அனைத்து அணிகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானபோதிலும், எதிர் வரும் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினால் சிக்கல் உண்டாகும். எனவே இனி விளையாட இருக்கும் போட்டிகளை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் சிஎஸ்கே அணி தனது வெற்றி பயணத்தை தொடங்கி சேப்பாக்தத்தில் மீண்டும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்