தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023: ஐபிஎல் போட்டி மைதானத்தில் கோதா! மல்யுத்த வீரர்களாக மாறிய ரசிகர்கள்!

IPL 2023: ஐபிஎல் போட்டி மைதானத்தில் கோதா! மல்யுத்த வீரர்களாக மாறிய ரசிகர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 30, 2023 12:14 PM IST

Delhi Capitals vs Sunrisers Hyderabad: அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டா இல்லை மல்யுத்த கோதாவா என்று விமர்சித்து வருகின்றனர்

ஐபிஎல்
ஐபிஎல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் 2023 தொடரின் 40வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து 20 ஓவர் ஆட்ட முடிவில் 197/6 ரன்கள் எடுத்து. இதைத்தொடர்ந்து தில்லி அணி 20 ஓவர் முடிவில் 188 /6 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் அங்கிருந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதற்கிடையில் டெல்லி - ஹைதராபாத் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர்களின் சண்டைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. வீடியோவில் 4 பேர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்கின்றனர். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டா இல்லை மல்யுத்த கோதாவா என்று விமர்சித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இச்சம்பவம் தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் சண்டையிட்டு கொண்டவர்களுக்கு இடையில் காயம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கும் இடையே சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்