தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nitish Rana Fined: இந்த சீசனில் கப்பம் கட்டும் 7வது கேப்டனாக நிதிஷ் ராணா! மீதம் மூன்று பேர் யார்

Nitish Rana Fined: இந்த சீசனில் கப்பம் கட்டும் 7வது கேப்டனாக நிதிஷ் ராணா! மீதம் மூன்று பேர் யார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 09, 2023 10:56 AM IST

பஞ்சாப் அணிக்கு எதிராக சூப்பர் வெற்றி பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை கெட்டியாக வைத்திருக்கும் கொல்க்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் அபராதம் கட்டும் 7வது கேப்டனாகியுள்ளார் ராணா.

ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ராணாவுக்கு அபராதம்
ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ராணாவுக்கு அபராதம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனாலும் இந்தப் போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாத காரணத்துக்காக கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. "பஞ்சாப் அணிக்கு எதிரான ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக நிதிஷ் ராணாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இதே காரணத்துக்காக ஆர்சிபி அணி கேப்டனகளாக இருந்த பாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரை தொடர்ந்து ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கப்பம் கட்டும் கேப்டனாக ஆகியுள்ளார் ராணா.

இந்த லிஸ்டில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் இதுவரை இடம்பெறாமல் குறித்த நேர்த்தில் பந்து வீசியிருக்கும் கேப்டன்களாக இருந்து வருகிறார்கள்.

இதில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட 10 நிமிடங்கள் வரை குறைவான நேரத்திலேயே பந்து வீசி முடித்தார்.

கேப்டன்கள் விதிகப்பட்டும் இந்த அபராதங்கள், அந்த அணியின் Fairplay விருதை பாதிக்ககூடும். அந்த வகையில் தற்போது Fairplay விருதுகளில் முதல் மூன்று இடங்களில் முறையே டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் 4வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்