தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Ban 1stodi Result India Loss The First Odi Against Bangladesh

Ind vs Ban 1stODI Result: மெஹிடி அதிரடியில் மகுடி இல்லாமல் பங்களா பாம்பாட்டம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 04, 2022 07:17 PM IST

கடைசி விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த மெஹிடி அதிரடியாக ஆடி வங்கதேச அணியை வெற்றிபெறசெய்தார். இந்திய அணி போராடி பரிதாபமாக தோல்விடைந்தது.

கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்த மெஹிடி
கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்த மெஹிடி

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, இந்தியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். துவக்கம் முதலே இந்திய வீரர்கள் வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

ரோஹித் சர்மா 31 பந்தில் 21 ரன்களும், தவான் 17 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய கோலி 15 பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க. இந்தியா நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டது.

அரை சதம் அடித்த கே.எல்.ராகுல்
அரை சதம் அடித்த கே.எல்.ராகுல்

அதன் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஷ் ஐயர், 39 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் போய்க் கொண்டிருக்க, கே.எல்.ராகுல் அதிரடி காட்டத் தொடங்கினார்.

அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்த வாஷிங்டன் சுந்தர் 43 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஷபஸ் அகமது டக் அவுட் ஆக, அவரை தொடர்ந்து வந்த ஷர்துல் தாகூரும் 2 ரன்களிலும், தீபக் சஹார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

5 விக்கெட் வீழ்த்தி ஷஹிப் அல் ஹசன்
5 விக்கெட் வீழ்த்தி ஷஹிப் அல் ஹசன்

இருப்பினும் மறுபுறம் ராகுல் பொறுமையுடன் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஜோடியாக இணைந்த முகமது சிராஜ் சிறிது நேரம் ஒத்துழைத்தார். ஒரு கட்டத்தில் விக்கெட் விழுந்து கொண்டிருக்க பொறுமை இழந்த ராகுல், அணியின் ரன் உயர்வுக்காக அதிரடியில் இறங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு விரட்ட நினைத்த அவர், 39.5 வது ஓவரில் இபாதத் ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 70 பந்தில் 73 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்தீப் சென், தனது முதல் இண்டர்நேஷன் போட்டியில் பேட்டிங்கை தொடங்கினார்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடிக்க நினைத்த முகமது சிராஜ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

பங்களாதேஷ் தரப்பில் ஹஷிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், இமான் ஹூசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் விக்கெட்டை வீழ்த்திய தீப் சஹார்
முதல் விக்கெட்டை வீழ்த்திய தீப் சஹார்

எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர் ஷண்டூ முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 63 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஹாக் 29 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பங்களாதேஷிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதன் பின் ஜோடி சேர்ந்த ஷஹிக் அல் ஹசன் மற்றும் ரஹிம் பொறுமையாக ரன் சேர்க்க, அவர்கள் விக்கெட்டை எடுக்க இந்தியாவிற்கு சிறிது நேரம் ஆனது. அல் ஹசன் 29 ரன்களிலும், ரஹிம் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சிராஜ் மற்றும் கோலி
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சிராஜ் மற்றும் கோலி

அதன் பின் இணைந்த மொகமத்துல்லா மற்றும் ஹூசைன் ஜோடி ரன்களை எடுக்க முயன்ற போது, மொகமதுல்லா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 78 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற சூழலில் பங்களாதேஷ் அணியின் டெய்லண்டர்கள் அந்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினர்.

இந்த வீரர்கள் அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த புதிய வியூகங்களை முன் வைத்தனர். இதனால் போட்டி பரபரப்பான சூழலை எட்டியது.

39 வது ஓவரை வீச வந்த அறிமுக பந்துவீச்சாளர் குல்தீப் சென், அபீப் குசேன் விக்கெட்டை எடுக்க, 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது வங்கதேச அணி. அதே ஓவரில் இடாட் ஹூசைன் விக்கெட்டையும் குல்தீப் எடுக்க, வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.

அடுத்தடுத்து வங்கதேச விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள்
அடுத்தடுத்து வங்கதேச விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள்

40 வது ஓவரின் இரண்டாவது பந்தை சிராஜ் வீச, அது ஹசன் காலில் பட்டதும் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. வங்கதேசம் ரிவியூ செல்ல, அது நிராகரிக்கப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது.

ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்கிற பரபரப்பான சூழலில் இறுதி விக்கெட்டுக்கு விளையாடிய வங்கதேச அணியின், முஸ்தபிஹர் மற்றுமு் மெஹிடி ஜோடி, அதிரடி காட்டியது. குறிப்பாக மெஹிடி சிக்ஸர்களை விளாச தொடங்கினார்.

கடைசி விக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் எடுக்க முயற்சியை இந்திய வீரர்கள் கட்டுப்படுத்தினர். 42.2 ஓவரில் தாகூர் பந்தில் மெஹிடி கொடுத்த கேட்சை கே.எல்.ராகுல் தவறவிட, ஆட்டம் பரபரப்பானது. 

42 பந்தில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அந்த ஓவரை வீச வந்த தீபக் சஹார் நோ பால் வீச, அடுத்த பந்து ப்ரீ ஹிட் தரப்பட்டது.  இதைத் தொடர்ந்து வீசப்பட்ட அடுத்த பால், கேட்ச் ஆக, அது ப்ரீ ஹிட் என்பதால் அதன் பிறகும் ஆட்டம் தொடர்ந்தது. மெஹிட் அதிரடியாக பவுண்டரிகளை விளாச , 40 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற பரபரப்பான சூழலுக்கு போட்டி தள்ளப்பட்து. அதன் பிறகும் மெஹிட் பவுண்டரிகளை தொடர்ந்தார். இதனால் போட்டி திடீரென வங்தேசம் பக்கம் சாய்ந்தது. இதனால் வங்தேச ரசிகர்கள் திடீரென உற்சாகம் ஆகினர். 

31 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால்வெற்றி என்கிற எளிய இலக்கிற்கு வங்கதேசம் நகர்ந்தது. கிடைத்த வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி, கடைசி விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறியது. 

46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி 190 ரன்கள- எடுத்து அபார வெறறிபெற்றது. அந்த அணியின் மெஹடி-முஸ்தபிர் ரஹ்மான் ஜோடி, கடைசி விக்கெட்டிற்கு  55 ரன்கள்சேர்த்து அணயை வெற்றி பெறசெய்தது.  மெஹடி அதிரடியாக ஆடி 39 பந்தில் 38 ரன்கள் எடுத்து அணியைவெற்றிபெறச் செய்தார். 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்