தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Aus 2nd T20:jasprit Bumrah Set For Return

Ind vs Aus 2nd T20:அணிக்கு திரும்புகிறார் பும்ரா! கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 23, 2022 06:00 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரீத் பும்ரா களமிறங்கவுள்ளார். கடந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் மோசமாக பந்து வீசிய உமேஷ் யாதவ்க்கு பதிலாக விளையாடுவர் என தெரிகிறது.

பந்து வீச்சு பயிற்சியின்போது ஐஸ்ப்ரீத் பும்ரா
பந்து வீச்சு பயிற்சியின்போது ஐஸ்ப்ரீத் பும்ரா (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

முக்கிய வீரர்களான டேவிட் வார்னர். மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய அணியில் இல்லாதபோதிலும் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் தற்போது விளையாடி வரும் இந்த அணிதான் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது.

எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் அணியின் பலம், பலவீனத்தை பகுப்பாய்வு செய்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக்கொள்ளும் விதமாக வாய்ப்பு அமைந்துள்ளது.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்ஷல் படேல், கொரோனா பாதிப்பால் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்கு பதிலாக சேர்க்கப்பட்ட உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியாக அமைந்திருந்தது. இதில் அனைவரின் ஓவரிலும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தனர்.

ஸ்லோ பந்து மூலம் பேட்ஸ்மேன்களை திணற வைத்த ஹர்ஷல் படேல், காயத்திலிருந்து குணமாகி அணிக்கு திரும்பிய பிறகு விளையாடி இந்தப் போட்டியில் 4 ஓவருக்கு 49 ரன்கள் என வாரி வழங்கினார். அதேபோல் சமீப காலமாக டெத் ஓவரில் சொதப்பி வரும் புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் கடைசி கட்டத்தில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

தங்களது திறமையை பல போட்டிகளில் நன்கு வெளிகாட்டிய புவனேஷ்வர் குமார் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இருப்பதால் பந்து வீச்சில் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதைப்போல் ஹர்ஷல் படேலும் தனது முழு திறமையாக வெளிகாட்டி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பந்து வீச்சில் ஈடுபட்டாக வேண்டிய நிலையில் உள்ளார்.

இதற்கிடையே தனது பிட்னஸை உறுதிப்படுத்திய பும்ரா அணிக்கு வர இருப்பது மற்ற பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் ஆகியோர் மீதான நெருக்கடியை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கை பொறுத்தவரை கேஎல் ராகுல் அரைசதம் அடித்தது, சூர்யகுமார் யாதவ் கன்ஸிடன்டான ஆட்டம், ஹர்திக் பாண்ட்யா அற்புதமான பினிஷ் ஆகியவை நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், கேப்டன் ரோஹித், விராட் கோலி ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதோடு ரன் குவிப்பிலு்ம ஈடுபட வேண்டும்.

தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்தாலும், இருவரும் பேட்டிங்கில் சமீப காலமாக பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமலேயே இருந்து வருகிறார்கள். எனவே இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டிங்கிலும் ஜொலிப்பது அவசியமாகியுள்ளது.

ஸ்பின்னர்களிள் சஹால், அக்‌ஷர் படேல் கூட்டணி உள்ளார்கள். இதில் சஹால் கடந்த சில போட்டிகளில் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுப்பதால் அவருக்கான வாய்ப்பு உறுதிபடுத்திக்கொள்ள மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் தனது பணியை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மொத்தத்தில் கடந்த போட்டியில் விளையாடி அதே வீரர்களுக்கே இந்தப் போட்டியிலும் தங்களது திறமையை நிருபிப்பதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். பும்ரா வருகை காரணமாக உமேஷ் யாதவ் மட்டும் நீக்கப்படலாம் என தெரிகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்