தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Aus 1st Test: Jadeja Proved To Be 'Rockstar'.. Smith Gave Thumbs Up!

Ind vs Aus 1st test: 'Rockstar' என நிரூபித்த ஜடேஜா.. தம்ஸ் அப் காட்டிய ஸ்மித்!

Manigandan K T HT Tamil
Feb 09, 2023 01:27 PM IST

Ravindra Jadeja: முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளில் இதுவரை 3 விக்கெட்டுகளை சுருட்டி கம்பேக் கொடுத்துள்ளார் ஜடேஜா.

தம்ஸ் அப் காண்பித்த ஸ்மித், விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா
தம்ஸ் அப் காண்பித்த ஸ்மித், விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பீல்டிங் செய்து வருகிறது.

தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இரண்டாவது ஓவரிலேயே உஸ்மான் கவாஜா 1 ரன்னில் நடையைக் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அதிரடி நாயகன் டேவிட் வார்னர் அடுத்த ஓவரில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டை சிராஜும், அடுத்த விக்கெட்டை ஷமியும் வீழ்த்தினர். பின்னர், 3வது விக்கெட்டாக களமிறங்கி லபுஸ்சேன் ஓரளவு நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவருடன் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் தோள் கொடுத்து ஆடினார்.

மார்னஸ் லபுஸ்சேன் 49 ரன்கள் எடுத்திருந்போது பந்துவீசிய ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

அவர் கிரீஸை விட்டு விரட்ட முயன்ற பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அற்புதமாக ஸ்டிம்பிங் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத லபுஸ்சேன் அரை சதத்தை பதிவு செய்ய முடியாத சோகத்தில் அதிருப்தியுடன் வெளியேறினார்.

அவர் அப்போது 123 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 49 ரன்களை விளாசி இருந்தார். பின்னர், களம்புகுந்த மாட் ரென்ஷாவை எல்பிடபிள்யூ முறை ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஜடேஜா.

42ஆவது ஓவரின் கடைசி பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. ஆல்-ரவுண்டரில் ஜடேஜா நம்பர் 1 இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக மீண்டும் அணியில் இடம்பிடித்த ஜடேஜா 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

துல்லியாக பந்துவீசி ஸ்மித்தை போல்டு செய்த ஜடேஜாவை thumbs up காண்பித்து பாராட்டினார் ஸ்மித்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்