தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wta Finals: ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் சாம்பியன்

WTA Finals: ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் சாம்பியன்

Manigandan K T HT Tamil
Nov 07, 2023 12:48 PM IST

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மீண்டும் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (AP11_07_2023_000039B)
போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (AP11_07_2023_000039B) (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

சீசனின் ஆறாவது பட்டம் மற்றும் ஒட்டுமொத்தமாக 17வது பட்டத்துடன், 22 வயதான ஸ்வியாடெக், 2023 ஆம் ஆண்டை தொடர்ச்சியாக இரண்டாவது சீசனில் நம்பர் 1 ஆக முடிப்பார், கான்குனில் வெற்றியுடன் அரினா சபலெங்காவை முந்தினார். 

இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி WTA இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

ஐந்தாம் நிலை வீராங்கனையான பெகுலா, WTA இறுதிப் போட்டியில் தனது முதல் இறுதிப் போட்டிக்கு வந்து அசத்தினார். வழியில் நான்கு எதிரிகளையும் வீழ்த்தி அற்புதமான ஃபார்மில் இருந்தார். இந்த ஆண்டு ஸ்வியாடெக்கிற்கு எதிரான அவரது 2-1 சாதனை அவரது வளர்ச்சியை வெளிப்படுத்தியது. ஸ்வியாடெக் முழு ஓட்டத்தில் இருக்கும்போது, கிட்டத்தட்ட யாரும் அவருடன் மல்லுக்க நிற்க முடியாது.

ஆரம்பத்திலிருந்தே, பெகுலாவை சிறந்த ஸ்ட்ரோக்குகளால் திணறடித்தார் ஸ்வியாடெக், அவளது மிருகத்தனமான டாப்ஸ்பின் ஃபோர்ஹேண்ட் அமெரிக்கனின் பாதுகாப்பைத் தவிர்த்தது. ஸ்வியாடெக்கின் அதிக வேகமும், தடகளத் திறமையும் அவருக்கு இந்த ஆட்டத்தில் உதவியது. பெகுலாவின் சர்வீஸையும் அற்புதமாக சமாளித்தார்.

பெகுலா ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயன்றபோது, அவர் மேலும் மேலும் ரிஸ்க்கை எடுத்தார், அவரது எரர்கள் ஒருபக்கம் வெளிப்பட்ட போதிலும் ஸ்வியாடெக் அற்புதமாக ஆடிவந்தார். 

வெற்றி பெற்றதை தொடர்ந்து இகா ஸ்வியாடெக் கோப்பைக்கு முத்தமிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்