தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tejaswin Shankar: வின்னரான தேஜஸ்வின்! உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்தியர்!

Tejaswin Shankar: வின்னரான தேஜஸ்வின்! உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்தியர்!

Manigandan K T HT Tamil
Feb 05, 2023 10:10 PM IST

New Balance Indoor Grand Prix title: பஹாமஸின் டொனால்டு தாமஸை வீழ்த்தினார் தேஜஸ்வின். டொனால்டு 2.23 மீட்டர் உயரம் தாண்டினார்.

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர்
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் (@Media_SAI)

ட்ரெண்டிங் செய்திகள்

தேஜஸ்வின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 2.26 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்று 2023 ஆண்டை வெற்றியுடன் தொடங்கினார் தேஜஸ்வின் சங்கர்.

பஹாமஸின் டொனால்டு தாமஸை வீழ்த்தினார் தேஜஸ்வின். டொனால்டு 2.23 மீட்டர் உயரம் தாண்டினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேரில் சுல்லிவன் 2.19 மீட்டர் உயரம் தாண்டினார்.

இதைத் தொடர்ந்து, தேஜஸ்வின் சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்த வெற்றி புத்தாண்டின் சிறப்பான தொடக்கம். முன்னணி வீரர்களுடன் போட்டியிடுவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

24 வயதான இந்திய தடகள வீரர், கன்சாஸ் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு தனது முதல் போட்டியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு கன்சாஸ் மாகாணத்திற்காக தனது இரண்டாவது NCAA பட்டத்தை வென்றார்.

டெல்லியைச் சேர்ந்த தேஜஸ்வின் சங்கர், 1998ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தார்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2.29 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். இவரது குடும்பத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

WhatsApp channel