தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Happy Birthday Sachin : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின் டிவிட்

Happy Birthday Sachin : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின் டிவிட்

Priyadarshini R HT Tamil
Apr 24, 2023 01:15 PM IST

Master Blaster Sachin Birthday : சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

 

சச்சினுடைய பிறந்தநாளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா லட்சுமணன், இஷாந்த் சர்மா, ஓஜா உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு 50வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் கிடைக்கட்டும். பல மில்லியன் இந்தியர்கள் அவர்கள் துறையில் சாதிப்பதற்கு தொடர்ந்து உந்துலாய் இருங்கள் என்று கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜண்ட் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான சச்சின் தெண்டுல்கர், 1989ம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2013ல் நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சுமார் 24 ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். 7 முறை 200 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 34,357 ரன்கள் குவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்