தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  French Open 2023: பிரெஞ்சு ஓபனில் வீராங்கனைகளுக்கு இரவு நேர டென்னிஸ் போட்டிகள் எப்போது?

French Open 2023: பிரெஞ்சு ஓபனில் வீராங்கனைகளுக்கு இரவு நேர டென்னிஸ் போட்டிகள் எப்போது?

Manigandan K T HT Tamil
Jun 01, 2023 11:46 AM IST

French Open: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இரவு நேரங்களில் போட்டிகள் நடத்தப்படுவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ரோலாண்ட் கேரோசு டென்னிஸ் மைதானம்
ரோலாண்ட் கேரோசு டென்னிஸ் மைதானம் (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இங்கு ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நமது நாட்டில் கிரிக்கெட்டிற்காக எத்தனை நேரம் ஒதுக்கி ரசிகர்கள் போட்டிகளை காண்பார்களோ அதே போன்று பிரெஞ்சு ஓபனை பிரான்ஸ் நாட்டவர் மிகவும் நேரம் ஒதுக்கி ரசிப்பார்கள்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இரவு நேரங்களில் போட்டிகள் நடத்தப்படுவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு வீராங்கனைகளின் போட்டிகள் மட்டும் இதுவரை இரவு நேரத்தில் நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இரவு நேரங்களில் மகளிர் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை என்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

வீரர்களைப் போன்ற வீராங்கனைகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த ஆண்டில் இதுவரை, முதல் நான்கு இரவு நேர ஆட்டங்கள் அனைத்தும் வீரர்கள் விளையாடிய போட்டிகளைக் கொண்டிருந்தன.

"நிர்வாகம் அதை மாற்றப் போவதில்லை என்றால், எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று 2017 அமெரிக்க ஓபன் சாம்பியனும் 2018 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியாளருமான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கூறினார்.

கோர்ட் பிலிப் சாட்ரியரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் முதலில் பிரான்சின் கேல் மான்பில்ஸ், ஆறாவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மான்பில்ஸ் புதன்கிழமை பிற்பகுதியில் போட்டியில் இருந்து விலகிய பின்னர், அதற்கு பதிலாக 2020 யுஎஸ் ஓபன் ரன்னர் அப் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அலெக்ஸ் மோல்கனுக்கு எதிராக விளையாடினார்.

வியாழனன்று வேறு யார் விளையாடுகிறார்கள்?

நடப்பு சாம்பியனும், நம்பர்-1 வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் கிளாரி லியுவையும், 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை வீராங்கனையான கோகோ காஃப் ஆஸ்திரியாவின் ஜூலியா கிராபரையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபாகினா செக் குடியரசின் இளம் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவையும் எதிர்கொள்கின்றனர். இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய காஸ்பர் ரூட், 8-ம் நிலை வீரரான ஜானிக் சின்னர், 12-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாஃபோ ஆகியோர் இந்த போட்டியில் உள்ளனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்