தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwc Qualifier: வெஸ்ட்இண்டீஸ் போட்டியில் எழுந்த சிக்கல்!யுஎஸ்ஏ வீரர் பவுலிங் செய்ய கூடாது - ஐசிசி அதிரடி முடிவு

CWC Qualifier: வெஸ்ட்இண்டீஸ் போட்டியில் எழுந்த சிக்கல்!யுஎஸ்ஏ வீரர் பவுலிங் செய்ய கூடாது - ஐசிசி அதிரடி முடிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 23, 2023 11:51 AM IST

யுஎஸ்ஏ அணி வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் பிலிப் பவுலிங் செய்வதில் இருந்து ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் அவரால் பவுலிங் செய்ய முடியாது.

இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் யுஏஎஸ் அணியின் பவுலர் கெய்ல் பிலிப்
இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் யுஏஎஸ் அணியின் பவுலர் கெய்ல் பிலிப்

ட்ரெண்டிங் செய்திகள்

26 வயதாகும் கெய்ல் பிலிப் கடந்த 18ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அவரது பவுலிங் ஆக்‌ஷன் முறைகேடான முறையில் இருந்ததாக அம்பயர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் அந்த போட்டியின் விடியோக்களில் அவரது பவுலிங் ஆக்‌ஷன் முறைகேடான முறையில் இருப்பதை உறுதி செய்த நிலையில் ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் உலகக் கோப்பை தொடரை நடத்தும் குழு, கெய்ல் பிலிப் பவுலிங் செய்வது தொடர்பான விடியோக்கள் பார்த்துள்ளது. இதில் அ்வரது பவுலிங் ஆக்‌ஷன் ஐசிசி விதிமுறைகளின் பிரிவு 6.7 இன் படி சட்டவிரோதமாக இருப்பதால், அவர் இனி வரும் போட்டிகளில் பவுலிங் செய்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளது. தனது பவுலிங் ஆக்‌ஷன் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்பதை நிருபிக்கும் வரை அவர் பவுலிங் செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருக்கும் இடைநீக்கம் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கெய்ல் பிலிப் இதுவரை யுஎஸ்ஏ அணிக்காக 5 போட்டிகள் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பிலிப் பவுலிங் சர்ச்சைய கிளப்பிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே அவரது சிறந்த பவுலிங்காக அமைந்துள்ளது. அத்துடன் இந்த தொடரில் இவர் 2 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலக கோப்பை தகுதி சுற்றில் தற்போது வரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள யுஎஸ்ஏ அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. யுஎஸ்ஏ அணி தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜூன் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்