தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sevvai Peyarchi 2023 : செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு பாதிப்பு? மேஷம் முதல் மீனம் வரை என்ன பலன்?

Sevvai Peyarchi 2023 : செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு பாதிப்பு? மேஷம் முதல் மீனம் வரை என்ன பலன்?

Jun 25, 2023 12:08 PM IST Divya Sekar
Jun 25, 2023 12:08 PM , IST

செவ்வாய் கிரகத்தின் இடப்பெயர்ச்சி, பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் : வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். 

(1 / 12)

ரிஷபம் : செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகள் நீங்கும்.

(2 / 12)

மிதுனம் : பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தீய கிரகத்தின் பார்வை படுவதால் பயணங்களில் எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் கவனமாக இருப்பது நல்லது.

(3 / 12)

கடகம்:தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை தினமும் வணங்கி வழிபடுங்கள். 

(4 / 12)

சிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.வேலைப்பளுவும் அதனால் மன அழுத்தமும் ஏற்படும். சனிபகவானின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் பயணம் செய்யப்போகும் செவ்வாய் மீது விழுகிறது.செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வழிபடுங்கள். 

(5 / 12)

கன்னி: விரைய செலவுகள் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். 

(6 / 12)

துலாம்:  கோபத்தை தவிர்க்கவும். நிதானம் தேவை. பணவருமானம் அதிகரிக்கும். சனி பார்வை பெறுவதால் உடல் நலத்தில் அக்கறை தேவை.

(7 / 12)

விருச்சிகம்: சனி பகவான் செவ்வாயை பார்ப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வை பெற்றுக்கொடுக்கும். சனியின் நேரடி பார்வையால் பயணங்களில் கவனம் தேவை.

(8 / 12)

தனுசு : உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. முதுகு பிரச்சினைகள் வரலாம். கந்த சஷ்டி படியுங்கள். கவலைகள் நீங்கும். 

(9 / 12)

மகரம் : வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள்.நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். 

(10 / 12)

கும்பம் : செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும்.செவ்வாய்கிழமைகளில் மவுன விரதம் இருப்பது நல்லது. ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். 

(11 / 12)

மீனம் : ஆறாம் வீட்டில் செவ்வாய் மீது சனிபகவான் பார்வை படுவதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும்.

(12 / 12)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்