தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Varun Tej : காதலே காதலே தனிப்பெரும் துணையே.. விரைவில் டும் டும்.. வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த போட்டோஸ்!

Varun Tej : காதலே காதலே தனிப்பெரும் துணையே.. விரைவில் டும் டும்.. வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த போட்டோஸ்!

Jun 10, 2023 08:59 AM IST Divya Sekar
Jun 10, 2023 08:59 AM , IST

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த கலக்கல் போட்டோஸ் இங்கு காண்போம்.

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

(1 / 6)

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதை லாவண்யா மறுத்திருந்தார்.

(2 / 6)

இந்நிலையில் வருண் தேஜ் கொனிடேலா தனது நீண்ட நாள் காதலியான நடிகை லாவண்யா திரிபாதியுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். முறையான நிச்சயதார்த்த விழா மூலம் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

(3 / 6)

திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. நடிகர் வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

(4 / 6)

'மிஸ்டர்' மற்றும் 'அந்தரிக்ஷம்' ஆகிய படங்களில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பாராட்டை பெற்ற நிலையில் தற்போது இருவரும் இல்லற வாழ்க்கையில் இணையவிருக்கின்றனர்.

(5 / 6)

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த போட்டோஸ்.

(6 / 6)

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த போட்டோஸ்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்