தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Morocco Earthquake: மொராக்கோவில் நெஞ்சை உலுக்கும் காட்சிகள்: 600-க்கும் அதிகமானோரை பலி வாங்கிய நிலநடுக்கம்

Morocco Earthquake: மொராக்கோவில் நெஞ்சை உலுக்கும் காட்சிகள்: 600-க்கும் அதிகமானோரை பலி வாங்கிய நிலநடுக்கம்

Sep 09, 2023 10:19 PM IST Manigandan K T
Sep 09, 2023 10:19 PM , IST

  • வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.

மொராக்கோவில் உள்ள மாரகேஷ் பகுதியில் இருந்து 76 கி.மீ தொலைவில் அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

(1 / 8)

மொராக்கோவில் உள்ள மாரகேஷ் பகுதியில் இருந்து 76 கி.மீ தொலைவில் அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.(AFP)

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் தகர்ந்து தரை மட்டமான. இரவு உள்ளூர் நேரப்படி 11.11மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.

(2 / 8)

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் தகர்ந்து தரை மட்டமான. இரவு உள்ளூர் நேரப்படி 11.11மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.(AFP)

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 632ஐ தாண்டி உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

(3 / 8)

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 632ஐ தாண்டி உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.(AFP)

நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த ஜி.20 மாநாட்டின் துவக்கத்தில் மொராக்கோவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(4 / 8)

நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த ஜி.20 மாநாட்டின் துவக்கத்தில் மொராக்கோவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.(AFP)

இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 1980ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(5 / 8)

இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 1980ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(REUTERS)

சேதமடைந்த பகுதியை பார்வையிடும் முதியவர்

(6 / 8)

சேதமடைந்த பகுதியை பார்வையிடும் முதியவர்(AFP)

நிலநடுக்கத்தால் சிதிலடமடைந்த தனது வீட்டை பார்வையிடும் பெண்

(7 / 8)

நிலநடுக்கத்தால் சிதிலடமடைந்த தனது வீட்டை பார்வையிடும் பெண்(AFP)

இடிபாடுகளுக்கு நடுவே நடந்து சென்ற இளம் பெண்

(8 / 8)

இடிபாடுகளுக்கு நடுவே நடந்து சென்ற இளம் பெண்(AFP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்