Guru Money Luck: குரு சூரியன் திருவிழா.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. யாருக்கு யோகம்.. பார்க்கலாம் வாங்க!
- Guru Money Luck: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
- Guru Money Luck: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(1 / 6)
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரக்கமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 6)
இந்நிலையில் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது குரு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. இந்த சேர்க்கை மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் மற்றும் சூரிய பகவான் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
மீன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறக்கூடும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்