குரு 12 ஆண்டு பணமழை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்
- Guru Peyarchi: குரு பகவானால் பண யோகம் கிடைக்கும் ராசிகளைப் பற்றி இங்கு காண்போம்
- Guru Peyarchi: குரு பகவானால் பண யோகம் கிடைக்கும் ராசிகளைப் பற்றி இங்கு காண்போம்
(1 / 7)
நவகிரகங்களின் மங்களநாயகன் குருபகவான். கிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடிய இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
(2 / 7)
குரு பகவான் எப்போதும் மற்றவர்களுக்கு அசுப பலன்களை கொடுப்பது கிடையாது. இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை தீமைகள் பக்தர்களுக்கு கிடைக்கின்றன. குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 7)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் சிரமங்களை சந்தித்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுப்பார். ரிஷப ராசிக்கு இடம் மாறிய பிறகு மிகப்பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுப்பார். அனைத்து விதமான சுப செலவுகளும் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 7)
கடக ராசி: மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன. வாழ்க்கையில் பல்வேறு விதமான புதிய மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(6 / 7)
சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மே மாதத்தில் இருந்து சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்