தளபதியின் பணமழை தொடங்கியாச்சு.. 3 ராசிகளுக்கு செவ்வாய் யோகம்
- Transit of Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.c
- Transit of Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.c
(1 / 6)
நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் துணிச்சல், வீரம், தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்ளும் கிரகங்களால் மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
(3 / 6)
தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி சனி பகவானின் மகர ராசியில் நுழைந்தார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு மங்களகரமான பலன்களை கொடுக்கப் போகின்றார். சுப பலன்கள் உங்களை தேடி வரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். கடின உழைப்பு நல்ல வெற்றியை பெற்று தரும்.
(5 / 6)
ரிஷப ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கப்படும் பெரிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட யோகங்கள் கிடைக்க உள்ளன. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்