தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top Masala: இந்திய உணவை ஆட்சி செய்யும் மசாலாக்கள்!

Top Masala: இந்திய உணவை ஆட்சி செய்யும் மசாலாக்கள்!

Aug 05, 2023 10:30 AM IST Suriyakumar Jayabalan
Aug 05, 2023 10:30 AM , IST

  • இந்தியாவில் பிரபலமாக இருக்கும் 7 மசாலாக்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

நமது உணவை சுவையாக மாற்றுவதே மசாலா பொருட்கள் தான். அப்படி கண்ணை கவரும் பல்வேறு விதமான மசாலாக்கள் உள்ளன. ஒவ்வொரு மசாலாவும் ஒவ்வொரு தனித்துவ சுவை கொண்டு. அப்படி நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பிரபலமாக இருக்கக்கூடிய மசாலா பொருட்கள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 8)

பொடி மசாலா: தென்னிந்திய மசாலாக்களில் இந்த பொடி மசாலா இல்லாமல் சமையல் நிறைவு பெறாது. உளுந்து, சீரகம், சிவப்பு, மிளகாய், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த தேங்காய் உள்ளிட்ட பொருட்களை அரைத்து உருவாக்குவது தான் இந்த பொடி மசாலா. 

(2 / 8)

பஞ்ச் போரான்: இந்த மசாலா இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். ஒடிசா மற்றும் வங்கதேச உணவுகளில் இந்த மசாலா கட்டாயம் இருக்கும். கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கடுகு, சீரகம் வெந்தயம் உள்ளிட்டவைகள் கலந்து இந்த மசாலா தயாரிக்கப்படுகிறது. 

(3 / 8)

கரம் மசாலா: மிக சிறந்த மசாலாவாக இது கருதப்படுகிறது. சூப், பிரியாணி, அசைவ உணவுகளை இந்த மசாலா இல்லாமல் நிறைவு பெறச் செய்ய முடியாது. நறுமண மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது தான் இந்த கரம் மசாலா. 

(4 / 8)

பஃபட் மசாலா: கோவா மற்றும் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மசாலா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சிவப்பு மிளகாய், மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. 

(5 / 8)

கோடா மசாலா: இந்த மசாலா இந்தியாவின் மேற்கு பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பருப்பு வகைகள், பாரம்பரிய குழம்புகள் உள்ளிட்ட சமையலுக்கு இந்த மசாலா பயன்படுத்தப்படுகிறது.  

(6 / 8)

தந்தூரி மசாலா: வட இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த மசாலா மிகவும் பிரபலமாகும். நமக்கு ஆசையை தூண்டும் அளவிற்கு உணவில் சுவையை கூட்டி தரும் இந்த தந்தூரி மசாலா. 

(7 / 8)

செட்டிநாடு மசாலா: தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற மசாலாவில் இதுவும் ஒன்று. இந்த மசாலாவை வீட்டிலேயே தயாரித்து உணவை மேலும் சுவை ஆக்கலாம். குறிப்பாக பிரியாணி சமைப்பதற்கு இந்த மசாலா அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்