தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rip Captain Vijayakanth: வசூலில் கதறவிட்ட விஜயகாந்த்.. டாப் 10 படங்கள் இதோ..!

RIP Captain Vijayakanth: வசூலில் கதறவிட்ட விஜயகாந்த்.. டாப் 10 படங்கள் இதோ..!

Dec 28, 2023 01:42 PM IST Suriyakumar Jayabalan
Dec 28, 2023 01:42 PM , IST

  • RIP Captain Vijayakanth: நடிகர் விஜயகாந்த் சினிமா பயணத்தில் சிறந்த 10 படங்கள் குறித்து இங்கே காண்போம்.

பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய சிறப்பான இடத்தைப் பிடித்தவர் இவர். சிரமப்பட்டு சினிமாவில் நுழைந்த இவர் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவருடைய சினிமா பயணத்தில் தலை சிறந்த 10 படங்களை இங்கே காண்போம். 

(1 / 11)

சட்டம் ஒரு இருட்டறை: இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் முறையாக வெற்றியை ருசித்து மிகப்பெரிய நட்சத்திரமாக தன்னை நிலை நிறுத்தினார். விஜயகாந்த். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 

(2 / 11)

வைதேகி காத்திருந்தாள்: மிகவும் அமைதியாக விஜயகாந்த் நடித்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், விஜயகாந்த் தான் சரியாக இருக்கும் என தீர்மானித்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றுது. திரையரங்குகளில் முழுமையாக்கி இந்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை செய்தது.

(3 / 11)

அம்மன் கோவில் கிழக்காலே: வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக இன்று வரை இந்த திரைப்படம் இருந்து வருகிறது. பல திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. விஜயகாந்த் பயணத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.  

(4 / 11)

ஊமை விழிகள்:  சிறு வயதிலேயே வயதான காவல்துறை அதிகாரியாக நடிக்க ஒப்புக் கொண்டார் விஜயகாந்த். தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. 

(5 / 11)

கேப்டன் பிரபாகரன்: தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்சிகளோடு எடுக்கப்பட்ட திரைப்படம் கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படத்தில் இருந்து தான் அனைவரும் இவரை கேப்டன் என்று அழைத்தனர் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட திரைப்படம் இது. இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திரைப்படம் ஆக இது விளங்கி வருகிறது. 

(6 / 11)

புலன் விசாரணை: காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று சிறந்த க்ரைம் திரில்லர் திரைப்படமாக இது அமைந்து மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. 

(7 / 11)

சத்ரியன்: இயக்குனர் மணிரத்னம் எழுதி தயாரித்த திரைப்படம் இது. ஊழல் அரசியல்வாதியை எதிர்த்து போராடும் ஒரு கண்ணியமான காவல்துறை அதிகாரியாக இதில் நடித்திருப்பார் இந்த திரைப்படம் கே.சுபாஷ் என்பவரால் இயக்கப்பட்டது. மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து திரையரங்குகளை நிரப்பியது இந்த திரைப்படம். 

(8 / 11)

சின்ன கவுண்டர்: கடினமான கதாபாத்திரங்களை நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போதும் மென்மையான கதாபாத்திரங்களையும் நேற்று நடிப்பார் விஜயகாந்த் அப்படி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த சின்ன கவுண்டர். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 

(9 / 11)

வானத்தைப்போல: குடும்ப கதையை தேர்ந்தெடுத்து அமைதியான கதாபாத்திரத்தில் முன்னெடுத்திருந்தார் விஜயகாந்த் இந்த திரைப்படம் 250 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

(10 / 11)

ரமணா: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவை புரட்டி போட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த கதாபாத்திரத்தை விஜயகாந்த் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என பலரும் ஏற்றுக்கொண்டனர் அந்த அளவிற்கு அந்த கதைக்களத்தை தாங்கி பிடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்தார் விஜயகாந்த்.

(11 / 11)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்