தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: வேறு சாதி இளைஞருடன் திருமணம் - இளம்பெண் படுகொலை

Crime: வேறு சாதி இளைஞருடன் திருமணம் - இளம்பெண் படுகொலை

Suriyakumar Jayabalan HT Tamil
May 07, 2023 01:50 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேறு சாதி இளைஞர் திருமணம் செய்த கொண்ட காரணத்தினால் இளம் பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இளம்பெண் படுகொலை
இளம்பெண் படுகொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதல் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இளம் பெண்ணை காசியாபாத் நகருக்கு ரூப் சந்திரா வருமாறு அழைத்துள்ளார்.

அவர்கள் இரண்டு பேரும் அங்குத் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு இருவரும் சில காலம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் கிராமத்திற்குத் திரும்பி வந்துள்ளனர். வேறு ஒரு சாதி நபரை இந்த இளம் பெண் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால், அந்தப் பெண்ணின் மாமா இளம் பெண்ணை கொலை செய்ய பல நாட்களாகத் திட்டம் தீட்டி வந்துள்ளார்.

கிராமத்திற்குத் திரும்பி வந்த அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை வெளியே இழுத்துச் சென்று கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த இளம் பெண்ணின் மாமா, அவரது மகன் உள்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ரூப் சந்திரா குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சீதாப்பூர் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

இதே போலக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆணவப் படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வேறு சாதி இளைஞரைத் தனது மகள் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அந்த இளைஞரைப் படுகொலை செய்த தந்தை உள்பட ஒரு குடும்பத்தையே காவல்துறையினர் கைது செய்து வழக்க பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திர பிரதேசம் மட்டுமல்ல அது தமிழ்நாட்டிலும் ஆணவ படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இரண்டு இளைஞர்களை ஆணவ படுகொலை செய்த சம்பவமும் இங்கே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்