தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்-நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பிரியங்கா காந்தி!

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்-நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பிரியங்கா காந்தி!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 29, 2023 12:33 PM IST

Delhi: மூத்த மல்யுத்த வீரர்களான பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டமானது டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மல்யுத்த வீராங்களை நேரில் சந்தித்த பிரியங்கா
மல்யுத்த வீராங்களை நேரில் சந்தித்த பிரியங்கா

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்தா வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை இன்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூத்த மல்யுத்த வீரர்களான பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டமானது டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கு பதிவு செய்ய கோரியும், இதுதொடர்பாக மேரிகோம் குழு அறிக்கையை வெளியிடவும் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அத்துடன் பணத்தாசை காட்டி அவர் மீதான புகாரை வாபஸ் பெறுமாறும் நெருக்கடி கொடுக்கின்றனர். எங்களது குடும்பத்தினரை மிரட்டவும் செய்கின்றனர் என குற்றம்சாட்டினர்.

எனவே இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் காலம் தாழ்த்தாமல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் கபில் தேவ், நீரஜ்சோப்ரா போன்ற பல வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்