தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Leaders Ramzan Wishes : இன்று ரமலான் - மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

World Leaders Ramzan Wishes : இன்று ரமலான் - மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

Priyadarshini R HT Tamil
Apr 22, 2023 11:39 AM IST

Happy Ramzan : உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மக்களிடம் அன்பும், சகோதரத்துவமும் பெருக சூளுரைப்போம் எனக்கூறி தங்களின் ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜீம்மா மசூதியில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை
டெல்லியில் உள்ள ஜீம்மா மசூதியில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை

ட்ரெண்டிங் செய்திகள்

நமது சமூகத்தில் கருணை மற்றும் சமூக நல்லிணக்கம் மேலும் வளரட்டும். அனைவரும் ஆரோக்கியமும், நலமும் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ஈத் முபாரக் என பிரதமர் மோடி தனது ரமலான் வாழ்த்துக்களை டிவிட்டரில் பதிந்துள்ளார்.

குடியரசுத்தலைவர் முர்முவின் டிவிட்டில், ஈதுல்-ஃபித்ர், நான் எனது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஈத், அன்பு மற்றும் கருணையின் விழா. அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற செய்தியை நமக்கு வழங்குகிறது. இந்த நன்னாளில் நாம் ஒன்றுசேர்ந்து முன்னேறுவோம் என உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் டிவிட்டில், அனைவருக்கும் ஈத் முபாரக். இந்த நல்ல நாள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழுமையையும் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

யுகே மற்றும் உலகம் முழுவதும் ரமலான் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு ஈத் முபாரக், என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் வாழ்த்தில், வாழ்த்து தெரிவித்துள்ள ஜோ.பைடன், அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ஈத் வாழ்த்துக்களை நானும், ஜில்லும் தெரிவித்துள்ளோம் இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.

யுஏஇயின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டுமும் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். யுஏஇ மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கள் அரபி மற்றும் இஸ்லாமிய தேசங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உலகத்துக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். கடவுள் நமது கீழ்படிதலை ஏற்றுக்கொள்ளட்டும். மகிழ்ச்சி பெருகட்டும். உங்கள் கனவுகள் நனவாகட்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்