தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral Video: வேறு ஒருவருடன் ஓடிப்போன மனைவி..நண்பர்களுக்கு சரக்கு, பிரியாணி ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவர்!

Viral Video: வேறு ஒருவருடன் ஓடிப்போன மனைவி..நண்பர்களுக்கு சரக்கு, பிரியாணி ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவர்!

Karthikeyan S HT Tamil
Oct 08, 2023 11:05 AM IST

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனது மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதை அறிந்த கணவர் பிரியாணி, மதுபானத்துடன் ஆடி, பாடி கொண்டாடிய நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

கேரளாவில் சரக்கு, பிரியாணி ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவர்.
கேரளாவில் சரக்கு, பிரியாணி ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவர்.

ட்ரெண்டிங் செய்திகள்

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி காதலுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. மனைவி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு காதலனுடன் சென்றதை அறிந்த அப்பெண்ணின் கணவர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

250க்கும் மேற்பட்ட நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து பிரியாணியுடன் மது விருந்து வைத்துள்ளார். ஆட்டம், பாட்டம் இல்லாமல் என்னய்யா ட்ரீட் என்பது போல் மது குடித்த உற்சாகத்தில் பாடல் ஒலிக்க குத்தாட்டம் போட்டுள்ளனர்.

 

மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதை மது விருந்து வைத்து கொண்டாடிய கணவர், முதலில் தனது முகத்தை மறைத்தாலும் பின்னர் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து ஆட்டம் போட தொடங்கினார். இந்த கொண்டாட்ட காட்சிகளை நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த நிலையில் இது கேரளா முழுவதும் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்