தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Oddisha : கொதிக்கும் தார்சாலை! பல கிலோ மீட்டர் தூரம் வெற்றுக்காலுடன் பயணம்! பென்ஷனுக்காக அலையும் 70 வயது மூதாட்டி!

Oddisha : கொதிக்கும் தார்சாலை! பல கிலோ மீட்டர் தூரம் வெற்றுக்காலுடன் பயணம்! பென்ஷனுக்காக அலையும் 70 வயது மூதாட்டி!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2023 11:32 AM IST

Oddisha : வங்கியில் இருந்து முதியோர் பென்சனை பெறுவதற்காக 70 வயது மதாட்டி வெற்றுக்காலுடன், பல கிலோமீட்டர் தூரம் சுடும் வெயிலில் உடைந்த சேருடன் நடந்தே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஓடிசாவில் உள்ள ஜரிகானில் அந்த மூதாட்டி வசிக்கிறார். இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. 70 வயது மூதாட்டி, வெற்றுக்காலுடன் ஒரு உடைந்த சேரின் உதவியுடன் தனது முதியோர் பென்சனை வாங்குவதற்காக வங்கிக்கு நடந்து செல்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் வெற்றுக்காலுடன், சுட்டெரிக்கும் வெயிலில், தார்க்காலையில் அந்தப்பெண்மணி நடந்து செல்கிறார். அவரால் நேராக நிமிர்ந்து கூட நடக்க முடியவில்லை. ஒரு நாற்காலியின் உதவியுடன் அவர் நடந்து செல்கிறார். அந்த நாற்காலியும் உடைந்து காணப்படுகிறது. அவர் ஒடிசாவைச் சேர்ந்த சூர்யா ஹரிஜன் ஆவார். முன்னரெல்லாம் அரசு பென்சன்களை காசாக கையில் வழங்கிவிடும். தற்போது அவை வங்கியில் செலுத்தப்பட்டு, வங்கியிலிருந்து எடுக்க வேண்டும். ஜீவன் பிரமான் இணையதளத்தில் அவர்களின் உடல் நிலையை குறிப்பிட்டு சான்றிதழைப்பெற்று அவர்கள் வங்கியில் ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூதாட்டி, சூர்யா ஹரிஜன் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர். அவரது மூத்த மகன் புலம்பெயர் தொழிலாளராக பல்வேறு மாநிலங்களில் வேலை செய்கிறார். அவர் தனது இளைய மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர்கள் மற்றவர்களின் கால்நடைகளை புற்கள் மேயவிட்டு வளர்த்து பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்கு விவசாய நிலம் கிடையாது. அவர்கள் குடிசையில் வசிக்கிறார்கள்.

அவர் தனது பென்சன் தொகையை வாங்குவதற்காக வங்கி சென்றார். அவரது கட்டை விரல் ரேகை ரெகார்ட்களில் இருக்கும் ரேகைகளுடன் பொருந்தவில்லை என்று கூறப்பட்டு, அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவரது விரல்கள் உடைந்து விட்டதால் அவரால் பணத்தை எடுக்கமுடியவில்லை. அவருக்கு பென்சன் பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் அவரது பிரச்னைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

அவரது விரல்கள் உடைந்துள்ளன. அதனால் அவரால் வங்கி கணக்கில் இருந்து அவரது பென்சன் தொகையை எடுக்க முடியவில்லை. எனவே நாங்கள் நேரடியாக அவருக்கு ரூ.3 ஆயிரத்தை கையில் கொடுத்துள்ளோம். நாங்கள் இந்தப்பிரச்னையை விரைவில் சரிசெய்வோம் என்று ஜாரிகான் கிளை எஸ்பிஐ மேலாளர் தெரிவித்தார்.

அவர்கள் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும், உதவியற்றவர்களுக்கு உதவுவதற்காக கிராமத்தில் பென்சன் பெறுபவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கையிலே பென்சன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்