தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Usa: எல்லைக்குள் நுழைந்த சீனாவின் உளவு பலூன்-அமெரிக்கா செய்தது என்ன தெரியுமா?

USA: எல்லைக்குள் நுழைந்த சீனாவின் உளவு பலூன்-அமெரிக்கா செய்தது என்ன தெரியுமா?

Manigandan K T HT Tamil
Feb 05, 2023 01:37 PM IST

US downs Chinese balloon: அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்க கண்டத்தின் மீது மற்றொரு உளவு பலூன் பறந்து வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அமெரிக்க எல்லையில் பறந்த சீன பலூன்
அமெரிக்க எல்லையில் பறந்த சீன பலூன்

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தண்ணீருக்கு மேல் இருக்கும்போதுதான் சுட்டு வீழ்த்த சிறந்த நேரம் என்று அதிபரிடம் அறிவுறுத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

60,000 அடி உயரத்தில் இருந்து நிலத்திற்கு மேல் கொண்டு வருவது தரையில் உள்ள மக்களுக்கு தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்று ராணுவ அதிகாரிகள் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, "பலூனை சுட்டு வீழ்த்தியது தவறானது. இது சர்வதேச எல்லை உரிமை மீறல் ஆகும். நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமை எங்கள் நாட்டுக்கும் உள்ளது" என்று சீனா பதிலடி கொடுத்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்ச அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட நாட்டின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை சீனா உறுதியுடன் நிலைநிறுத்தும். அதே நேரத்தில் பதிலுக்கு மேலும் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையையும் கொண்டுள்ளது. இதேபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது" என்றார்.

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்க கண்டத்தின் மீது மற்றொரு உளவு பலூன் பறந்து வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இது சீன அனுப்பிய உளவு பலூன் என அமெரிக்க குற்றம்சாட்டியது. இந்த பலூன் தங்கள் நாட்டைச் சேர்ந்ததுதான் என சீனா ஒப்புக் கொண்டாலும், அது உளவு பலூன் இல்லை என விளக்கம் தந்தது. வானிலை விவரங்களை சேகரிப்பதற்கான கருவியே பலூனில் இடம்பெற்றுள்ளதாக சீனா தெரிவித்தது.

காற்று வீசும் திசை மாறியதன் காரணமாக அமெரிக்க வான் பரப்புக்குள் அந்த பலூன் எதிர்பாராமல் நுழைந்துவிட்டதாகவும் சீனா தெரிவித்தது.

முன்னதாக, இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தனது சீனப் பயணத்தை ஒத்தி வைத்தார்.

IPL_Entry_Point