Kharge About PM : ’இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் யார்?’ செய்தியாளர்களிடம் போட்டு உடைத்த மல்லிகார்ஜுன கார்கே!
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் ஆண்டார்
ஹரியானா மாநிலம் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் வருவார்கள்’ என்ற பிரதமர் மோடியின் கூற்றுக்கு பதில் அளித்த அவர், 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது கூட இதே போன்ற விஷயங்கள் கூறப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் இரண்டு ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்ததாக கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளாக பஞ்சாப் வந்த ஒருவர் பிரதமராக பொறுப்பேற்று நாட்டை நடத்தி, அதன் பொருளாதாரத்தை மாற்றியவர் என்றும் மன்மோகன் சிங்கிற்கு கார்கே புகழாரம் சூட்டினார்.