தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Up Accident : ‘ஒரே பைக்கில் சவாரி’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வாகனம் மோதி பலி – உத்ரபிரதேசத்தில் சோகம்

UP Accident : ‘ஒரே பைக்கில் சவாரி’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வாகனம் மோதி பலி – உத்ரபிரதேசத்தில் சோகம்

Priyadarshini R HT Tamil
Jun 24, 2023 11:36 AM IST

UP Accident : உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒன்றாக பைக்கில் பயணம் செய்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இவர்கள் உறவினரின் திருமணம் நேற்று ஷாகாபாத் பகுதியில் நடந்தது. அதற்காக இவர்கள் நான்கு பேரும் செல்ல கிளம்பினர். இவரது மனைவியின் சகோதரி ஜூலி (35) என்பவரும் அவர்களுடன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பினார். இவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரே பைக்கில் செல்ல முடிவெடுத்து, அதிலே சிரமப்பட்டுக்கொண்டு அமர்ந்து சென்றனர்.

திருமணத்திற்கும் சென்றுவிட்டு அவர்கள் அனைவரும் ஒன்றாகவே மீண்டும் வீடு திரும்பினார்கள். வரும்போது 5 பேரும் ஒரே பைக்கில் அமர்ந்து வந்தனர். இந்நிலையில், ஷாஜகான்பூர்-லக்னோ மாநில நெடுஞ்சாலையில் திலாவர்பூர் கிராமம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், அவர்களின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவிட்டது.

இதில் பைக்கில் பயணம் செய்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல் முழுவதிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. அனைவருக்கும் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் அந்த சாலையே முழுவதிலும் ரத்தம் பரவியிருந்தது. அனைவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால், 5 பேரும் சம்பவ இடத்திலேயே துடிக்கதுடிக்க உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே பைக்கில் பயணம் செய்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோல் ஒரே பைக்கில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யும்போது ஆபத்து ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், எச்சரிக்கை கொடுத்தாலும் மக்கள் அதை கடைபிடிக்காமல் இதுபோல் தங்களது சாவை தாங்களே தேடிக்கொண்டு வாழ்வை இழக்கின்றனர். பொதுமக்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். இறந்தவர்களுக்கு உத்ரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்