தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ரஷ்யாவில் எலி, கரப்பான்களுடன் வசித்த உக்ரைன் குழந்தைகள் – பெற்றோர்களிடம் கதறல்

ரஷ்யாவில் எலி, கரப்பான்களுடன் வசித்த உக்ரைன் குழந்தைகள் – பெற்றோர்களிடம் கதறல்

Priyadarshini R HT Tamil
Apr 09, 2023 11:43 AM IST

Russia - Ukraine War உக்ரைனில் 31 குழந்தைகள் மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்தார்கள். இவர்களை ரஷ்யாவில் இருந்து அழைத்துக்கொண்டு வருவதற்காக ஒருவாரம் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

9 வயதான தனது சகோதரியின் பெண்ணை பார்த்து கதறும் யானா ஷபோச்கோ
9 வயதான தனது சகோதரியின் பெண்ணை பார்த்து கதறும் யானா ஷபோச்கோ

ட்ரெண்டிங் செய்திகள்

5வது மீட்புபணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன. நாங்கள் அழைத்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களை அழைத்து வருவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் இந்த மீட்புப்பணிகள் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்று சேவ் உக்ரைனின் நிறுவனர் மைகோலா குலேபா தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவில் இருந்து திரும்பி வந்த குழந்தைகள், எலிகளும், கரப்பான்பூச்சிகளுடனும் வாழ்ந்தார்கள் என்று மைகோலா குலேபா தெரிவித்தார். மேலும் உக்ரைனில் உள்ள அவர்களின் பெற்றோரை தேடிக்கண்டுடிபிடிக்க ரஷ்யாவில் யாரும் முன்வரவில்லை என்று அவர் கூறினார். 

குழந்தைகள் 5 மாதங்களில் 5 இடங்களை மாற்றிவிட்டார்கள். சில குழந்தைகள் தாங்கள் எலிகளுடனும், கரப்பான்பூச்சிகளுடனும் வாழ்ந்ததாக தெரிவித்தனர் என்று அவர் கூறினார். 

அபகரித்துக்கொண்ட கார்கிவ் மற்றும் கெர்சன் பகுதிகளில் இருந்து கோடை முகாம்கள் என்று ரஷ்யர்களை அழைக்கும் இடங்களுக்கு குழந்தைகள் முதலில் கொண்டு செல்லப்பட்டார்கள் என்று அவர் கூறினார். கடந்தாண்டு பிப்ரவரியில் மாஸ்கோவின் படையெடுப்புக்குப்பின்னர் 19,500 குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக உக்ரைன் கணக்கெடுத்துள்ளது. கிவ் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை கட்டுப்படுத்தும் மாஸ்கோ, குழந்தைகள் கடத்தப்படுவதை மறுத்துள்ளது. குழந்தைகள் அவர்களின் பாதுகாப்புக்காக அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.        

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்