தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Two Leopards Dead : ஆந்திராவில் அடுத்தடுத்து இறந்து கிடந்த சிறுத்தைகள்.. காரணத்தை கண்டறியும் பணியில் வனத்துறையினர்!

Two Leopards Dead : ஆந்திராவில் அடுத்தடுத்து இறந்து கிடந்த சிறுத்தைகள்.. காரணத்தை கண்டறியும் பணியில் வனத்துறையினர்!

Divya Sekar HT Tamil
Aug 18, 2023 11:21 AM IST

ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் அடுத்தடுத்து இறந்து கிடந்த சிறுத்தைகள்.
ஆந்திராவில் அடுத்தடுத்து இறந்து கிடந்த சிறுத்தைகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்து கிடந்த ஆண் மற்றும் பெண் சிறுத்தையை நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் விஷம் வைத்து சிறுத்தைகளை கொன்றார்களா அல்லது வனவிலங்குகளிடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தைகள் இறந்ததா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன் காலை 9 மணியளவில் சிறுத்தை உடலை மீட்டு அருகே தேடும் போது ஒரு குன்றின் மீது மற்றொரு ஆண் சிறுத்தை, ஒரு ஆட்டின் சடலம் உட்பட இறந்ததைக் கண்டோம். அந்த ஆட்டைத் தின்று சிறுத்தைகள் இறந்திருக்குமா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் வனத்துறையினர், சிறுத்தைகளில் மாதிரிகளை பிரித்தெடுத்து, பெங்களூரில் உள்ள ஹெப்பலில் உள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் கால்நடை உயிரியல் நிறுவனத்திற்கு அனுப்பி இறப்புக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக அலிபிரி மலைப்பாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அச்சமடைய வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்