தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Twitter Logo : டிவிட்டர் லோகோவை மாற்றவுள்ளதாக எலன் மஸ்க் தகவல்!

Twitter Logo : டிவிட்டர் லோகோவை மாற்றவுள்ளதாக எலன் மஸ்க் தகவல்!

Priyadarshini R HT Tamil
Jul 23, 2023 11:57 AM IST

Twitter Logo : ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாய் (Doge) படத்தை லோகோவாக மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. எலன் மஸ்க் புதிய வடிவத்தை பகிர்ந்துள்ளார்.

டிவிட்டர் லோகோ
டிவிட்டர் லோகோ

ட்ரெண்டிங் செய்திகள்

டிவிட்டர் உரிமையாளர் இன்று ஒரு பூதாகரமான அறிவிப்பை வெளியிட்டார். டிவிட்டர் இனி, அதன் பறவை லோகோவை நீக்கும் என்று அறிவித்தார். அந்த லோகோ பல ஆண்டுகளாக டிவிட்டரின் அடையாளமாக உள்ளது.

விரைவில் நாங்கள் படிப்படியாக டிவிட்டர் பிராண்டுக்கும், அனைத்து பறவைகளுக்கும் விடை கொடுப்போம். எக்ஸ் லோகோ இன்று இரவு போஸ்ட் செய்யப்பட்டு நாளை நாங்கள் உலகம் முழுவதும் அதை நேரலையாக்குவோம் என்று டிவிட்டர் சொந்தக்காரர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த சமூக வலைதளத்தை எடுத்து நடத்தி வரும் எலன் மஸ்க் அப்போது முதல் செய்த ஒரு பெரிய நடவடிக்கையாக இது இருக்கலாம். டிவிட்டர் ஒரு தனிப்பட்ட நிறுவனம் கிடையாது. இது புதிதாக துவங்கப்பட்ட எக்ஸ் கார்ப்புடன் இணைக்கப்படவுள்ளது. மஸ்க் டிவிட்டர் அக்கவுன்டில் எக்ஸ் என்று போட்ட பின்னர் இது வெளிச்சத்துக்கு வந்தது.

எலன் மஸ்குக்கு எக்ஸ் என்ற எழுத்து மிகவும் பிடிக்கும். ஏப்ரல் மாததில் லிண்டா யக்காரினோலை எலன் மஸ்க் டிவிட்டரின் புதிய சிஇஓவாக பணியமர்த்தினார். அவரை பணிக்கு வரவேற்று எலன் மஸ்க் போட்ட டிவிட்டில், லிண்டாவுடன் பணி செய்வதற்கு ஆவலாக இருக்கிறேன். அவர் இந்த பிளாட்ஃபார்மை எக்ஸ், அனைத்துமாக ஆப்பாக மாற்றுவார் என்று கூறியிருந்தார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவர் செய்த டிவிட்டில், அனைத்துக்குமான எக்ஸ் ஆப்பை உருவாக்குவதற்கான முன்னோட்டமாகத்தான், டிவிட்டரை வாங்கினேன் என்று குறிப்பிட்டிருந்தார். டிவிட்டரில் ஆதி முதல் அந்தம் வரை எலக் மஸ்க் பல்வேறு மாற்றங்களை தீவிரமாக செய்தார். பெரியளவிலான பணிநீக்கம் மற்றும் வெரிபிஃகேசன் கிடைக்க கட்டணம் என அதிரடி மாற்றங்களையும் அறிவித்தார்.

சனிக்கிழமை டிவிட்டர் நேரடி மெசேஜ்களின் எண்ணிக்கையை அன்வெரிஃபைட் நபர்களுக்கு அனுப்பும் அளவை அது குறைக்கும் நடைமுறையை கொண்டுவரும் என்று அறிவிக்கப்பட்டது. நாங்கள் விரைவில் சில மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம். நேரடி மெசேஜ்களின் ஸ்பேம்களை குறைப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படுகிறது. அன்பெரிஃபைட் அக்கவுண்ட்களுக்கு தினசரி மெசேஜ் லிமிட் இருக்கும். குறிப்பிட்ட அளவு நேரடி மெசேஜ்கள் மட்டுமே அவர்கள் அனுப்ப முடியும். அதிக மெசேஜ்கள் அனுப்ப வேண்டுமென்றால் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்று டிவிட் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கட்டணம் செலுத்தி வெரிபிஃகேசன் பெற்றவர்கள் எளிதாக எந்த தடையுமின்றி நேரடி மெசேஜ்களை அனுப்ப முடியும். இது நிறுவனத்தில் நிறைய பேர் வெரிஃபிகேஷன் பெறுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்