தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Raksha Bandhan 2023: உயிரிழந்த சகோதரனுக்கு ராக்கி கட்டிய சகோதரி.. தெலுங்கானாவில் நெகிழ்ச்சி!

Raksha Bandhan 2023: உயிரிழந்த சகோதரனுக்கு ராக்கி கட்டிய சகோதரி.. தெலுங்கானாவில் நெகிழ்ச்சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2023 12:35 PM IST

சகோதரரின் சடலத்தில் கௌரம்மா ராக்கி கட்டி உடலுக்கு தீங்கு நேர கூடாது என்று வேண்டினார்.

உயிரிழந்த சகோதரரின் சடலத்திற்கு ராக்கி கட்டிய சகோதரிகள்
உயிரிழந்த சகோதரரின் சடலத்திற்கு ராக்கி கட்டிய சகோதரிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் எலிகேடு மண்டலம் துளிகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சவுத்ரி கனகய்யா. இவரது சகோதரி கௌரம்மா. இவர் ரக்சா பந்தன் நாளான இன்று தன் சகோதரருக்கு ராக்கி கட்ட ஆசையாய் அவரது வீட்டிற்கு வந்தார். 

ஆனால் அங்கு சவுத்ரி கனகய்யா மாரடைப்பால் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சகோதரரின் சடலத்தில் கௌரம்மா ராக்கி கட்டி உடலுக்கு தீங்கு நேர கூடாது என்று வேண்டினார். இந்த சம்பவம் மரண வீட்டிற்கு வந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரக்சா பந்தன் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ரக்சா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு அளிப்பது வழக்கம்.

இன்று நாடு முழுவதும் உற்சாகமாக ரக்சா பந்தன் கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில் இப்படி உயிரிழந்த சகோதர் கைகளில் கௌரம்மா ராக்கி கட்டியது பார்த்தவர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க செய்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்