தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mumbai Crime: மாதவிடாய் ரத்த கரையை பார்த்த அண்ணன் சந்தேகத்தில் தங்கையை கொலை செய்த கொடூரம்!

Mumbai Crime: மாதவிடாய் ரத்த கரையை பார்த்த அண்ணன் சந்தேகத்தில் தங்கையை கொலை செய்த கொடூரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 09, 2023 12:00 PM IST

Murder: சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆடையில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளது.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல் முறையாக மாத விடாய் வந்த தங்கையை தவறாக நினைத்து அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரில் சுமித் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன், சுமித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்தார். இந்நிலையில் சுமித் தனது சகோதரியின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்தார். உடனே எப்படி ரத்தக்கறை வந்தது என்று சுமித் தனது சகோதயை மிரட்டி உள்ளார்.

ஆனால் அந்த குழந்தையால் தான் பூப்பெய்ததை சரியாக சொல்ல தெரியவில்லை. இதனால் சிறுமி கூச்சத்தில் விழித்து இருக்கிறார். உடனே தனது சகோதரி யாருடனோ பாலியல் உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கோபத்தில் சுமித் தனது சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பின் உதைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்திருக்கிறார். இதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

சத்தம் கேட்டு அவர் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சுமித்திடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆடையில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறுமி விளையாட்டு தனமாக அதை சரியாக கவனிக்கவில்லை.

இது குறித்து சுமித் தனது சகோதரியிடம் கேட்டதற்கு அவளால் அதுகுறித்து அண்ணிடம் விளக்க தெரியவில்லை. இதனால் அச்சிறுமிக்கு யாருடனோ பாலியல் தொடர்பு இருப்பதாகவும், அந்த நபருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக சந்தேகப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமித் தனது சகோதரியை வாயை பொத்தி தீ வைத்து காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இக்கொலையில் சுமித் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்