தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tea: வாங்களேன்.. சூடா ஒரு கப் பிரியாணி டீ குடிக்கலாம்! இல்ல முட்டை டீ வேணுமா?

Tea: வாங்களேன்.. சூடா ஒரு கப் பிரியாணி டீ குடிக்கலாம்! இல்ல முட்டை டீ வேணுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 23, 2023 11:00 AM IST

Biriyani Tea: வாங்களேன் ஒரு கப் சூடா பிரியாணி டீ குடிக்கலாம். இல்ல முட்டைடீ, ரசகுல்லா டீ.. மிளகாய் டீ எது வேணும் இப்படி யாராவது கேட்டால் நாம் என்ன நினைப்போம். நம்மை கலாய்க்கிறார்கள் என்று கோபப்படத்தானே செய்வோம். ஆனால் ஹைதராபாத்தில் இப்படித்தான் நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் போல...

தேநீர்
தேநீர்

ட்ரெண்டிங் செய்திகள்

சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என எந்நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் டீ தான். இன்னும் சொல்லப்போனால் கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி வேலை தேடி வரும் இளைஞர்கள் பலருக்கு சமயங்களில் ஒரு நேர உணவாகவே டீ அமைந்து விடுகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க டீ மட்டும் குடித்து விட்டு ஒரு நேர உணவை முடித்துக்கொள்ளும் மனிதர்கள் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றனர்.

அதே சமயம் டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும், அதனை குடிக்க கூடாது என பலர் கூறி வந்தாலும் டீ இல்லாமல் வாழ்வே இல்லை என பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பலருக்கு டீ தான உணவாக இருக்கிறது. பொதுவாகவே மக்களிடையே வேலைப்பளு, மன அழுத்தம், வேலை செய்யும் போது தூக்கம் ஆகியவைத் தொடர்ந்து,பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மூலிகைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மேற்கு வங்க மாநிலம் பெல்காரியில் பிளாட்பார்மில் 17 ஆண்டுகளாக ஆகாஷ் சாகா என்ற டீ க்கடை உள்ளது. இங்கு பிரியாணிடீ, ரசகுல்லா டீ, முட்டை டீ, மிளகாய் டீ, என விதவிதமாக டீ விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீக்கடை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 200 கப் டீ விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு பச்சை மிளகாய் டீ 20 ரூபாய்ககு விற்பனை செய்யப்படுகிறது. 20 முதல் 50 ரூபாய் வரை முட்டை டீ விற்பனை செய்யப்படுகிறது. இப்படி டீக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடையின் உரிமையாளர் ஆகாஷ் சாகா, கடையை திறந்த போது எங்களுக்கு பெரிதாதாக வாடிக்கையாளர்கள் இல்லை. அதனால் ஸ்பெஷ் டீ வகைகள் பக்கம் திரும்பினோம். முட்டை டீ, மிளகாய் டீ, பிரியாணி டீ, ரசகுல்லா டீ, சாக்லேட்டீ, கோல்டு காபி, ஹாட்காபி என வெரைட்டி கொடுத்தோம். இப்போது எங்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்