தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manish Kashyap: தேசிய பாதுகாப்பு சட்டம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Manish Kashyap: தேசிய பாதுகாப்பு சட்டம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Karthikeyan S HT Tamil
May 08, 2023 12:32 PM IST

Manish Kashyap: தம் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் மணிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி
யூடியூபர் மணிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையைச் சேர்ந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மணிஷ் காஷ்யப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அமர்வு, தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில், போலி வீடியோக்களை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக் கூடாது என்றும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாடவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், யூடியூபர் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 

இந்த போலி வீடியோவை பரப்பிய குற்றச்சாட்டு குறித்து யூடியூபர் மணீஷ் காஷ்யப் உள்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பீகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மணீஷ் காஷ்யப்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்தநிலையில், தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து யூடியூபர் மணிஷ் காஷ்யப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 8) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்