தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sridevi: நடிகை ஸ்ரீதேவி நினைவு நாள் - மகள் மற்றும் கணவர் உருக்கமான பதிவு

Sridevi: நடிகை ஸ்ரீதேவி நினைவு நாள் - மகள் மற்றும் கணவர் உருக்கமான பதிவு

Priyadarshini R HT Tamil
Feb 24, 2023 12:13 PM IST

Death Anniversary: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் கணவர் போனி கபூரும் “நாங்கள் இப்போதும் உங்களை எங்கும் தேடிக்கொண்டிக்கிறோம்“ என்று மனமுருகி பதிவிட்டுள்ளனர். ஸ்ரீதேவியின் 5வது நினைவு நாளில் அவர்களின் இந்த பதிவுகள் ரசிகர்களையும் ஸ்ரீதேவியின் நினைவில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் மகள் ஜான்வி கபூருடன்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் மகள் ஜான்வி கபூருடன்.

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான இருந்தவர் ஸ்ரீதேவி பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு துபாயில் ஸ்ரீதேவி ஓட்டல் அறையில் குளிக்கச்சென்றபோது பாத்டப்பில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மகள்கள் இருவரும் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள். அதில் ஜான்வி கபூருக்கு 25 வயதும், குஷி கபூருக்கு 22 வயதும் ஆகிறது. அவரது நினைவு நாளில் அவர்களின் உருக்கமான இன்ஸ்டாகிராம் பகிர்வு ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு.
நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு.

ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்துபோன தனது தாயின் புகைப்படத்தை பகிர்ந்து, அம்மா நான் உங்களை எங்கும், எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை பெருமையடைச்செய்யும் என்ற நினைத்து செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், நான் என்ன செய்தாலும் உங்களிலே துவங்கி உங்களிலே முடிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

பூமி பட்னேகர், ரகுல் பிரீத் சிங், தாஹிரா காஷ்யப், சஞ்சய் கபூர், மஹீப் கபூர், வருண் ஷர்மா மற்றும் மணீஷ் மல்ஹோத்ரா ஆகிய பிரபலங்களும், இதய வடிவிலான எமாடிக்கான்களை பகிர்ந்து தங்கள் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பதிலிட்டு ஒரு விசிறி, ‘அடுத்த முறை நீங்கள் படப்பிடிப்புக்குச் செல்லும்போது. உங்களின் 200 சதவீத உழைப்பை அதில் செலுத்துங்கள். இதுதான் அவரது முதல் காதல், அவர் உங்களை பாரத்துக்கொண்டும், அவர் நீங்கள் நன்றாக நடிக்காததற்காக திட்டிக்கொண்டும் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே உங்கள் வேலையில் ஈடுபடுங்கள். உங்கள் நடிப்பில் அவர்கள் உங்கள் தாயை காண வேண்டும். அவர் நடிப்பதுபபோலவே நடித்து மற்றவர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குங்கள்‘ என்று மிக உருக்கமான நீண்ட பின்னூட்டத்தையிட்டு அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். மற்றொருவர் தனது பின்னூட்டத்தில் அவர் எப்போதும் உங்களோடுதான் இருக்கிறார்.

நடிகை குஷி கபூர் மற்றும் போனி கபூர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவுகள்.
நடிகை குஷி கபூர் மற்றும் போனி கபூர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவுகள்.

நடு இரவில் போனி கபூரும் ஒரு பகிர்வை வெளியிட்டுள்ளார். அது மிக உணர்ச்சி பூர்வமாக இருந்தது. மறைந்த அவரது மனைவியை நினைவு கூர்ந்து, அவரது புகைப்படத்தை பகிர்ந்து, ‘5 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எங்களைவிட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் அன்பும், நினைவுகளும் எங்களை தொடர்ந்து நகர்த்திச்செல்லும் உந்துவிசையாக இருக்கும். அந்த அன்பு எங்களுடன் எப்போதும் இருக்கும்‘ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘என்னை தனியாக விட்டுச்சென்றவர் என்னுடனே இன்றும் இருக்கிறார்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

குஷி கபூரும் தனது தாயாருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

துபாயில் ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி தனது முதல் படமான தடாக்கில் நடித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதேவி தனது 54வது வயதில் இறந்தார். அவர் இறந்த 5 மாதத்தில் தடாக் படம் வெளியானது. 2018ல் ஜீரோ என்ற படத்தில் ஸ்ரீதேவி கடைசியாக நடித்திருந்தார். குஷி கபூரின் முதல் படம் இந்தாண்டில் வெளியாக உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்