HBD Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை!-special article on august 18 and 2024 and union finance minister nirmala sitharamans birthday - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை!

HBD Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை!

Marimuthu M HT Tamil
Aug 18, 2024 07:25 AM IST

HBD Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை குறித்து அறிவோம்.

HBD Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை!
HBD Nirmala Sitharaman: தமிழ்நாட்டிலிருந்து போய் வடக்கில் நிற்கும் ஆளுமை.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கதை! (PTI)

கோபமும் கண்டிப்பும் கண்களில் அனல் கக்குகின்றன. மறுபுறம் பட்டியலின கட்சித்தொண்டர் வீட்டில் அமர்ந்து தலைவாழை போட்டு உணவு உண்ணுகிறார். அவர் வேறு யாரும் அல்ல.

இந்த இருவேறு எக்ஸ்ட்ரீம் முகங்களுக்குச் சொந்தக்காரர் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கம்பீரமான ஆளுமையாகவும், களப்பணியாளராகவும் சுற்றிச்சூழலும் பாங்கு ஆகிய இவையிரண்டும் எந்தவொரு அரசியல்வாதியும் நிர்மலா சீதாராமனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் ஆகும்.

திமுகவை அடிக்கடி வம்புக்கு இழுப்பவர்:

மணிப்பூரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் தங்கள் ஜனநாயக குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. அப்போது எல்லாம், ஆளும் பாஜக ஏதாவது வகையில், ஒரு MP மூலம் பதிலடி கொடுக்கும். கடந்த ஆண்டு அப்படியொரு வாய்ப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாய்க்க, திமுகவை கிடைக்கிற கேப்பில் கடுமையாக அட்டாக் செய்து பேசினார்.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் சட்டப்பேரவையில் வைத்து சேலையைப் பிடித்து இழுத்ததாகவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்ப திமுகவினருக்கு அருகதை இல்லை எனவும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்பு, ஒரு பெண் முழு நேர மத்திய நிதி அமைச்சரானார் என்றால், அவர் நிர்மலா சீதாராமன் தான். அதுவும் 5 முறை நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளவர், தற்போதைய புதிய மத்திய அரசவையிலும் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெருமைக்குரியவரும் அவரே.

நிர்மலா சீதாராமனின் பின்னணி:

சாவித்திரி மற்றும் நாராயண சீதாராமன் ஆகிய தம்பதிகளுக்கு 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மதுரையில் பிறந்தார், நிர்மலா. பள்ளிப்படிப்பு விழுப்புரத்தில் உள்ள புனித இதய கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், சென்னையில் உள்ள வித்யதோய பள்ளியிலும் திருச்சியில் பிலாமினோ பள்ளியிலும், அதே ஊரில் புனித ஹோலி கிராஸ் பள்ளியிலும் பள்ளிப்படிப்பைப் படித்து முடித்தார்.

திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்திலும் பொருளாதார பாடப்பிரிவில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை நிறைவு செய்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் மிகவும் சவாலான பணியை நிதி அமைச்சராக இருந்து எதிர்கொண்டவர். அதேபோல், உக்ரைன் போரினால் வரும் பணவீக்கப் பிரச்னைகளையும் அனுதினமும் எதிர்கொண்டு வருகிறார்.

கடந்தாண்டு, புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்திக்காட்டியதன் மூலம் பலரது பாராட்டுகளைப்பெற்றவர், நிர்மலா சீதாராமன்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ’முட்டை வைக்கிற கோழிக்குத்தான் வலி தெரியும் உண்டு’. என்னதான் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்றது, சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையையே சொல்லாதது உள்ளிட்டப் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றாலும், மத்திய நிதி அமைச்சர் என்பது மிகப்பெரும் பொறுப்பு. அதனை நிர்மலா சீதாராமன் நின்று நிதானமாக ஆடி வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி வணங்குவதில் பெருமைகொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.