Fact Check : ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என நிர்மலா சீதாராமன் சொன்னாரா? உண்மை என்ன?
Fact Check : நாங்கள் ஆட்சியமைக்க உதவியவர்களுக்காக நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் பாஜகவை ஆட்சியில் அமர செய்த ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பாரபட்சம் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் 40 தொகுதிகளில் தோற்கடித்தால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்தது.
உண்மைப் பதிவைக் காண:
புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று ஐந்து நியூஸ் கார்டுகளை ஒன்றாக பகிர்ந்துள்ளனர். அதில், “தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று இருந்தது.
மற்றொரு நியூஸ் கார்டில், இது எங்க டீலிங் பட்ஜெட்! நாங்கள் ஆட்சியமைக்க உதவியவர்களுக்காக நிதி ஒதுக்குவதில் என்ன தவறு? இதெல்லாம் பதிலுக்கு பதில் உதவும் பழக்கம்தான். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று இருந்தது.